கெட்ட வார்த்தை பேசுவோம்
பெருமாள்முருகன் எழுதிய ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ என்னும் நூல் ஏற்கனவே அச்சில் இரு பதிப்புகள் வெளியாகியுள்ளன. இப்போது மின்னூலாக வெளியாகிறது. வார்த்தைகளில் கெட்ட வார்த்தை என்று எதுவும் இல்லை. ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பது தொல்காப்பியம். ஒரு சொல்லுக்கு நல்ல அர்த்தம், கெட்ட அர்த்தம் என அடைமொழி தருவது, அத்தகைய அர்த்தத்தை ஏற்றுவது நாம்தான். ஏன் அவ்வாறு அர்த்தம் தருகிறோம், எந்தெந்தக் காலத்தில் எவ்வாறெல்லாம் அர்த்தம் தரப்பட்டது, அதற்குள் ஒளிந்திருக்கும் மனித மனோபாவங்கள் எவை என்பவற்றைப் பற்றியெல்லாம் விரிவாக ஆராய வேண்டியது அவசியம். அவ்வகையில் இந்நூல் ஒரு முன்னெடுப்பு என்று சொல்லலாம். தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள செய்திகளைப் பல்வேறு கோணத்தில் ஆராயும் கட்டுரைகள் இதில் உள்ளன.