படைப்புக் குழுமம் நேர்காணல் 1

எழுத்துக்கு அஞ்சும் சமூகம் உங்கள் பூர்வீகம் பற்றிச் சொல்லுங்கள்.? பெருமாள் முருகன் என்பது அப்பா அம்மா வைத்த பெயரா? இல்லை நீங்களே வைத்துக் காெண்டீர்களா? நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கூட்டப்பள்ளி  நான் பிறந்து வளர்ந்த ஊர். அங்கிருந்து பத்துப் பன்னிரண்டு…

3 Comments

புதுமைப்பித்தன் : ‘சங்க இலக்கியம் புகைப்படக் கவிதை’

பழந்தமிழ் நூல்களில் தனிப்பாடல்கள், கம்பராமாயணம், முத்தொள்ளாயிரம் முதலியவற்றில் புதுமைப்பித்தனுக்கு மிகுந்த ஆர்வமும் வாசிப்பும் இருந்துள்ளன. பழந்தமிழ்ப் பாடல்களை நயப்பார்வையில் சுவைக்கும் வகையில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒருபாடலை எடுத்துக்கொண்டு அதில் உள்ள நயங்களை எல்லாம் விளக்கிக் கட்டுரை எழுதும் வகைமையை உருவாக்கியவர் அல்லது…

1 Comment

என் ஆசிரியர் : 3

உருவம் மங்கவில்லை (தொடர்ச்சி) அவர் பங்குதாரராக இருந்த சுயநிதிப் பள்ளியில் என் அண்ணன் மகள் +2 பயின்றார். அவளைச் சேர்ப்பதற்காகச் சென்றபோதுதான் ‘அவர் என் ஆசிரியர் இல்லை’ என்று தோன்றியது. அப்பள்ளி தொடங்கிய காலத்தில் மருத்துவக் கல்வியில் சேர்வதற்குக் கிராமப்புற இடஒதுக்கீடு…

1 Comment

என் ஆசிரியர் : 2

இனிய முகம் (தொடர்ச்சி) பன்னிரண்டாம் வகுப்பில் எங்களுக்கான வேதியியல் ஆசிரியர் துணைத் தலைமையாசிரியராகவும் இருந்தார். அதனால் அவருக்கு நிர்வாக வேலைகள் ஏராளம். மேலும் அவர் பட்டதாரி ஆசிரியராக இருந்து முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர். +2 பாடங்களை அவரால் சரியாக…

1 Comment

என் ஆசிரியர் : 1

கடுகு சிறிது; காரம் பெரிது ஓர் ஆசிரியரின் இயல்புகளும் அவர் பாடம் சொல்லும் முறையும் பிடித்துவிட்டால் அந்தப் பாடத்திலும் பேரார்வம் தோன்றிவிடும். இளவயதில் இருந்து தமிழ்ப்பாடம் மட்டுமே எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. பாடநூலில் இருக்கும் எல்லாச் செய்யுள்களையும் மனனம் செய்துவிடுவேன். குறிப்பு…

4 Comments

பாரதியாரின் ‘தொண்டு’

தொண்டு என்னும் சொல்லைத் தம் கவிதைகளில் பலமுறை பாரதியார் பயன்படுத்தியுள்ளார். உரைநடையிலும் அவர் பயன்படுத்தியிருக்கக் கூடும். கவிதை அடிகள் நினைவில் இருப்பதைப் போல உரைநடை இருப்பதில்லை. நிதானமாக அவர் உரைநடையிலும்  ‘தொண்டைத்’ தேடிப் பார்க்க வேண்டும். இப்போதைக்குக் கவிதையில் அச்சொல்லாட்சியைக் காண்போம்.…

2 Comments

தொடரும் ‘தொண்டு’

தொண்டு என்னும் சொல் கொங்கு வட்டாரத்தில் வழங்கும் பொருள் பற்றி எழுதியிருந்ததை வாசித்த நண்பர்கள் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். அவை இச்சொல் பற்றி மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது.  ‘தொண்டு’ என்பதன் பழைய பொருள்  ‘அடிமை’ தான். தமிழ்நாட்டில் அடிமை முறை இல்லை…

2 Comments