ஆளண்டாப் பட்சி | Aalandaa Patchi

Category Tag

பெருமாள்முருகனின் ஆறாவது நாவல்இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும் சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக் கொள்ளலாம்; பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்ப்பந்தத்தால் விடுபட்டுப் புலம்பெயர்ந்து வேற்றிடத்தில் நிலைகொள்ளும் உழவுக் குடும்பம் ஒன்றின் போராட்டமே இந்நாவல். மனிதர்களை அண்ட விடாத அதே சமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட பிரம்மாண்டமான பறவையாகக் கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளண்டாப் பட்சியின் இயல்புகள் இந்நாவல் மாந்தர்கள் பலருக்கும் பொருந்திப் போகின்றன.