ஏறு வெயில் | Aeru Veil
நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஓன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் கையில் விழுந்த பனிக்கட்டிகளாய் உறவுகள் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரமுகங்கள் வெளிப்படுவதையும் தன் கொங்குத் தமிழில் பெருமாள்முருகன் சித்தரிக்கிறார். புதியவற்றின் வருகை நிகழ்த்தும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இயலாத மனநிலைக்கும் அவற்றைத் தவிர்க்க முடியாத சூழலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் மனிதர்களின் மனமொழியை நமக்குக் காட்சிப்படுத்துகிறார் முருகன், இன்னமும் வெம்மை குறையாத ‘ஏறுவெயில்’ நேரான எதார்த்தக் கதைசொல்லலின் முக்கியத்துவத்தை மீண்டும் நிரூபிக்கிறது.