• தமிழில் படைப்பெழுத்துப் பயிலரங்கம்

    PARR Library 6200 Windhaven Pkwy, Plano, United States

    தமிழில் படைப்பெழுத்துப் பயிலரங்கம். ஒரு சிறுகதை எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? உங்கள் அனுபவங்களை இலக்கியமாக மாற்ற விரும்புகிறீர்களா? தமிழில் எழுதத் தொடங்கியிருக்கிறீர்களா? இளம் படைப்பாளர்கள், வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் மற்றும் தமிழில் படைப்பெழுத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக அவ்வை தமிழ் மையம் இந்தச் சிறப்புப் பயிலரங்கத்தை ஏற்பாடு செய்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகனிடமிருந்து படைப்பெழுத்தின் நுட்பங்களை அறிந்துகொள்ளவும், அவருடன் நேரடியாக உரையாடவும் இது ஓர் அரிய வாய்ப்பு.