புதுமைப்பித்தன் : ‘சங்க இலக்கியம் புகைப்படக் கவிதை’

பழந்தமிழ் நூல்களில் தனிப்பாடல்கள், கம்பராமாயணம், முத்தொள்ளாயிரம் முதலியவற்றில் புதுமைப்பித்தனுக்கு மிகுந்த ஆர்வமும் வாசிப்பும் இருந்துள்ளன. பழந்தமிழ்ப் பாடல்களை நயப்பார்வையில் சுவைக்கும் வகையில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒருபாடலை எடுத்துக்கொண்டு அதில் உள்ள நயங்களை எல்லாம் விளக்கிக் கட்டுரை எழுதும் வகைமையை உருவாக்கியவர் அல்லது…

1 Comment

மீனெலாம் களிக்கும் மாதோ!

தேனை அடுக்கித் தொகுக்கும் கம்பராமாயண நாட்டுப்படலப் பாடலில் முதலில் ஆலைவாய்க் கரும்பின் தேன். கரும்பு நன்கு விளையும் வயல்கள். அருகில் கரும்புச்சாற்றைப் பிழிந்து வெல்லம் தயாரிக்கிறார்கள். கரும்புச்சாற்றை வேண்டுமளவு பருகலாம். அதன் சுவை தேனைப் போல அத்தனை இனிப்பாக இருக்கிறது. மித…

2 Comments

இல்லை துயில்!

கம்பராமாயணம், பாலகாண்டம், நாட்டுப்படத்தில் வரும் ‘நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி’ என்னும் பாடல் பற்றிய விளக்கத்தில் தூக்கம், தூக்கமின்மை பற்றி எழுதியிருந்த பகுதியை வாசித்த என் மாணவர் ஒருவர் இன்னொரு பாடலை நினைவுக்குக் கொண்டு வந்தார். வகுப்பில் அடிக்கடி…

1 Comment

நிழலிடை உறங்கும் மேதி

மரபிலக்கியத்தைப் பயில விரும்புவோர் எந்த நூலிலிருந்து தொடங்குவது? தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வாரியாக எழுதிய மு.அருணாசலம் இக்கேள்வியை உ.வே.சாமிநாதையரிடம் கேட்டபோது அவர்  ‘பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடற் புராணம்’ நூலிலிருந்து தொடங்குமாறு சொன்னாராம். அவர் சொல்லைத் தட்டாத மு.அ., திருவிளையாடற்…

3 Comments

போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது

கம்பராமாயணத்தைப் போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. அதன் கவிச்சுவை, சொல்திறன், யாப்பிலக்கணப் புலமை, விரிந்த பார்வை முதலியவற்றுக்காகப் போற்றிப் பயில்பவன் நான். கம்பரின் கருத்துக்களைப் பொருத்தவரை இருவிதமாகக் காணலாம். சில கருத்துக்களில் காலத்தை அனுசரித்துச் சென்றிருக்கிறார். சிலவற்றில் காலத்தை மீறிச்…

2 Comments

நானும் சபிக்கிறேன்!

சமீபத்தில் எழுத்தாளர் வண்ணநிலவன் தம் முகநூல் பதிவில்  ‘பாராளுமன்றம் என்பது தவறு. பார் என்றால் உலகம் என்று பொருள். நாட்டை ஆளும் மன்றம், நாடாளுமன்றம் என்பதே சரியானது’ (23-04-25) என்று எழுதியிருந்தார். அதன்பின் தேடிய போது வேறு சிலரும் இது தொடர்பாகச்…

3 Comments

மீனாட்சிசுந்தர முகில் 2

பெருஞ்செல்வரான தேவராச பிள்ளைக்குத் தமிழ்க் கல்வியில் ஆர்வம் மிகுதி. செய்யுள் செய்ய வேண்டும் என்னும் விருப்பமும் இருந்தது. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் சிறப்பைக் கேள்வியுற்று அவரைப் பெங்களூருக்கு வரவைத்துச் சில மாதங்கள் தங்க வைத்துக் கல்வி கற்றார். தம் மாணவர்களுடன்…

3 Comments