தாமஸ் வந்தார்!

தாமஸ் ஹிட்டோஷி ப்ரூக்ஸ்மா (செல்லமாக ‘டாம்’) அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் வசிப்பவர். தாய்வழிப் பூர்விகம் ஜப்பான். தந்தை வழி நெதர்லாந்து. டாம் அமெரிக்கக் குடிமகன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மாணவப் பருவத்தில் தமிழ் கற்கக் கிடைத்த நிதிநல்கை ஒன்றின் வழியாகத் தமிழ்நாட்டுக்கு…

3 Comments

கம்பராமாயணத்தில் உலக வழக்கு – 2

பாலகாண்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ‘தாடகை வதைப் படலம்.’ அதில் பயிலும் சொற்கள் தமிழ் மொழியின் எல்லாவகை அழகும் பொங்க அமைந்தவை.  தாடகையைக் கொல்ல இராமன் தயங்குகிறான். அப்போது அவள் எவ்வளவு கொடியவள் என விசுவாமித்திரர் இராமனுக்கு எடுத்துச் சொல்கிறார்.  அதில்…

4 Comments

கம்ப ராமாயணத்தில் உலக வழக்கு – 1

தமிழ்க் காப்பிய இலக்கியத் தொடக்கம் சிலப்பதிகாரம். தொடர்ந்தவை மணிமேகலை, பெருங்கதை. மூன்றும் ஆசிரியப்பாவால் ஆனவை. ஆசிரியப்பா உரைநடைத் தன்மை கொண்டது. உணர்ச்சி விவரணைகளுக்கு இடமில்லாமல் கதையைச் சொல்வதற்கு ஆசிரியப்பா ஏற்றது. அதன் போதாமையை உணர்ந்த இடங்களில் விருத்தப்பாக்களை இளங்கோவடிகள் கையாண்டிருக்கிறார். விருத்தப்பாவை…

1 Comment

நிறையக் கேள்விகள்!

இலயோலா கல்லூரியில் பங்கேற்ற நிகழ்ச்சி பற்றி நான் எழுதிய கட்டுரையில் (கற்றுக் கொடுக்கும் கலந்துரையாடல்) இப்படி ஒருதொடர் வருகிறது:  ‘மாணவர்கள் நிறையக் கேள்விகளுடன் இருக்கிறார்கள்.’ ‘நிறையக் கேள்வி’ என்பதில் ஒற்று மிகுமா என நண்பர் க.காசிமாரியப்பன் கேட்டிருந்தார். ‘மிகும்’ என்று சொல்லிவிட்டேன்.…

5 Comments

கலை  ‘மற்றும்’ அறிவியல்

இம்மாதத் தொடக்கத்தில் திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என் படைப்புகள் தொடர்பான இருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அதைப் பற்றி ஏற்கனவே பதிவு எழுதியுள்ளேன். அக்கல்லூரியின் பெயர் மாற்றம் பற்றி இப்போது சிறுபதிவு. தந்தை பெரியார் திருச்சியை…

3 Comments

மசைச்சாமி குன்றுடையான்

கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து  கருவலூருக்குச் செல்லும் வழியில் ‘மசக்கவுண்டன் செட்டிபாளையம்’ என்றொரு ஊர்ப்பெயரைக் கண்டேன். ஊர்ப்பெயரில் செட்டி, கவுண்டன் என இரண்டு சாதிப் பெயர்கள். இது அபூர்வம். செட்டிபாளையம் என ஊர்ப்பெயர் இருந்து முன்னொட்டாக ‘மசக்கவுண்டன்’…

5 Comments

தொடக்கம், துவக்கம், ஆரம்பம்

தொடக்கம், துவக்கம் ஆகியவற்றில் எது சரியான சொல் என்பது பற்றிப் பலர் பேசியுள்ளனர். பேசிக் கொண்டும் இருக்கின்றனர். பெரும்பாலோர் ‘தொடக்கம்’ என்பதே சரி என்னும் கருத்துடையவர்கள். தொடக்கமே சரி எனினும் துவக்கம் வழக்கிற்கு வந்துவிட்டதால் ஏற்றுக் கொள்ளலாம் என்பது சிலருடைய கருத்து.…

4 Comments