பாலும் அழுக்கும்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் சங்க இலக்கியத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு. விடுதலைக்கு முன்  ‘எங்களுக்கும் பழமை இருக்கிறது. இலக்கியம், பண்பாடு எல்லாவற்றிலும் தொன்மை மிக்கவர்கள் நாங்கள்’ என்று ஆங்கிலேயர்களுக்கு உணர்த்தச் சங்க இலக்கியத்தை அறிஞர்கள் ஆதாரமாக்கினர்.  ‘ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு…

0 Comments

தாமஸ் வந்தார்!

தாமஸ் ஹிட்டோஷி ப்ரூக்ஸ்மா (செல்லமாக ‘டாம்’) அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் வசிப்பவர். தாய்வழிப் பூர்விகம் ஜப்பான். தந்தை வழி நெதர்லாந்து. டாம் அமெரிக்கக் குடிமகன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மாணவப் பருவத்தில் தமிழ் கற்கக் கிடைத்த நிதிநல்கை ஒன்றின் வழியாகத் தமிழ்நாட்டுக்கு…

3 Comments

இட ஒதுக்கீட்டு விழிப்புணர்வு

அரசுப் பள்ளியில் படிக்கும் எங்கள் ஊர் மாணவர்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பயில்பவர்கள். அரசுப் பள்ளியில் இருக்கும் ஆங்கில வழிப் படிப்பில் பயில்வதாகப் பலர் சொன்னார்கள். 2013-2014ஆம் கல்வியாண்டில்  அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிப்…

5 Comments

கம்பராமாயணத்தில் உலக வழக்கு – 2

பாலகாண்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ‘தாடகை வதைப் படலம்.’ அதில் பயிலும் சொற்கள் தமிழ் மொழியின் எல்லாவகை அழகும் பொங்க அமைந்தவை.  தாடகையைக் கொல்ல இராமன் தயங்குகிறான். அப்போது அவள் எவ்வளவு கொடியவள் என விசுவாமித்திரர் இராமனுக்கு எடுத்துச் சொல்கிறார்.  அதில்…

4 Comments

கம்ப ராமாயணத்தில் உலக வழக்கு – 1

தமிழ்க் காப்பிய இலக்கியத் தொடக்கம் சிலப்பதிகாரம். தொடர்ந்தவை மணிமேகலை, பெருங்கதை. மூன்றும் ஆசிரியப்பாவால் ஆனவை. ஆசிரியப்பா உரைநடைத் தன்மை கொண்டது. உணர்ச்சி விவரணைகளுக்கு இடமில்லாமல் கதையைச் சொல்வதற்கு ஆசிரியப்பா ஏற்றது. அதன் போதாமையை உணர்ந்த இடங்களில் விருத்தப்பாக்களை இளங்கோவடிகள் கையாண்டிருக்கிறார். விருத்தப்பாவை…

1 Comment

இத்தாலிப் பயணம் 3 : சுடுஒயின் ஒத்தடம்

இத்தாலியின் பழமையான நகரங்களில் ஒன்று பிளோரன்ஸ். ஆர்னோ ஆற்றங்கரையின் இருபுறமும் நகரம். ஆற்றங்கரைக்குப் போக வேண்டுமானால் பெருந்தடுப்புச் சுவர்களில் எங்காவது விடப்பட்டிருக்கும் வழியில் இறங்கிச் செல்ல வேண்டும். ஆற்றில் படகுகள் செல்கின்றன. டிசம்பர் மாதத்தில் ஆறு நிதானமாக உள்ளடங்கிக் கீழாக ஓடிக்…

2 Comments

காதல் – சாதி – ஆணவப் படுகொலை

புதிய தலைமுறை இணைய இதழில் ‘ஊனே... உயிரே...’ என்னும் தலைப்பில் சிறு நேர்காணல்கள் வெளியாகி வருகின்றன. இதழாளர் அங்கேஸ்வர் என்னிடம் எடுத்த நேர்காணல் இது. ஒலிப்பதிவு செய்து எழுதிய வடிவம் இதழில் வெளியாகியுள்ளது. அதை ஓரளவு செம்மையாக்கி இங்கே வெளியிடுகிறேன். இதழ்ப்…

1 Comment