தமிழைப் படித்தால் இரண்டுக்கும் லாபம் இல்லை
எழுத்தாளரும் தமிழ் இலக்கிய முனைவர் பட்ட ஆய்வாளருமான சதீஷ்குமார் (iskra) சமீபத்தில் உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ நூலிலிருந்து ஒரு மேற்கோளை முன்னிறுத்தி முகநூலில் ஒருபதிவு போட்டிருந்தார். உ.வே.சாமிநாதையருக்குப் பெண் பார்த்துத் திருமணம் முடிவு செய்கிறார்கள். பெண்ணின் தாத்தா ஐயாவையர், தந்தை கணபதி…