சாதிதான் பெரிய விஷயம்

    சாதி தொடர்பாக நிறையப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறோம் என்னும் சலிப்புணர்வு அடிக்கடி தோன்றும். எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்று எண்ணி வேறு பக்கம் தலையைத் திருப்பினாலும் ஏதோ ஒருவகையில் சாதி விஷயம் அன்றாடம் வந்து சேர்ந்துவிடுகிறது. ஒவ்வொரு நாளும்…

0 Comments

மலையாள மனோரமா விழா : 3 உதயநிதி ஆற்றிய  உரை

      மலையாள மனோரமா விழாவில் இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு தமிழ்நாட்டின் துணைமுதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஓர் அமர்வில் பங்கேற்றுப் பேசியது. மிகச் சில அரசியல்வாதிகளே இத்தகைய விழாக்களில் பங்கேற்பதைக் கண்டிருக்கிறேன். மேடைப் பேச்சாக அல்லாமல் அறிவார்ந்த உரைகளுக்கு…

1 Comment

மலையாள மனோரமா விழா : 2 புத்துயிர் பெற்ற கதை

    மலையாள மனோரமா விழாவில் நவம்பர் 2 அன்று முற்பகல் 10 மணிக்கு எனது அமர்வு. என்னுடன் உரையாடியவர் நண்பர் கண்ணன். இருவரும் தமிழிலேயே பேசலாம் என்று கூறியிருந்தனர். எனினும் மலையாள வாசகர்களுக்கு நன்றாகப் புரிய வேண்டும் என்பதற்காகக் கேள்விகளை…

0 Comments

மலையாள மனோரமா விழா – 1 கருத்துரிமைக்கு ஓர் கரும்புள்ளி

      2024, நவம்பர் 1,2,3 ஆகிய நாட்களில் கேரளம், கோழிக்கோடு நகரில்  ‘மலையாள மனோரமா’ நடத்திய கலை இலக்கியத் திருவிழாவில் பங்கேற்றேன். நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட அச்சு ஊடகம் மனோரமா. 1888ஆம் ஆண்டிலிருந்து அதன் வரலாறு தொடங்குகிறது.…

0 Comments

கிறு, கின்று

இலக்கிய விமர்சனக் கட்டுரை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். எழுதியவர் நன்கு அறிமுகமான எழுத்தாளர்தான்.  ‘சில கதைகள் பழைய இலக்கியச் செய்திகளை நினைவுபடுத்துகிறவை’ என்று ஒரு தொடர். ‘நினைவுபடுத்துகின்றவை’ என்றல்லவா வர வேண்டும்? சரி, அச்சுப்பிழையாக இருக்கக் கூடும் எனக் கருதி மேலே…

1 Comment

24/82

    கடந்த (2024) ஏப்ரல் மாதத்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. கோழிக்கோட்டில் இருந்து சபில் கிருஷ்ணன். என் அம்மாவைப் பற்றி எழுதிய ‘தோன்றாத் துணை’ நூல் மலையாளத்தில்  ‘அதிருஷ்ய சாநித்யம்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்பாகி உள்ளது. மொழிபெயர்த்தவர் மினிப்ரியா.…

3 Comments

நொந்தேன் நொந்தேன்

தீபாவளி முடிந்து ஊருக்குச் செல்லும் கூட்டத்தில் நானும் கொஞ்சம் அல்லாட நேர்ந்தது. கேரளம், கோழிக்கோட்டிலிருந்து கரூருக்கு ரயில் பயணம். கோழிக்கோடு ரயில் நிலையத்தில் மக்கள் வெள்ளம். அதில் நீந்தித்தான் ஏற்கனவே பதிவு செய்த என் ரயிலையும் உரிய பெட்டியையும் அடைய முடிந்தது.…

4 Comments