மௌனன் யாத்ரீகா: கேள்விகளுக்கான பதில்கள்.

  1. கவிதைக்கு பாடுபொருளைத் தேர்வு செய்யும்போது அதில் தொழிற்படும் பொருளும் கவிஞனின் மனமும் ஒரு புள்ளியில் இணையாவிட்டால் கவிஞனால் பிதுக்கப்படும் கவிதை வாழ்வோடு எந்த ஒட்டுதலும் இல்லாத பண்போடு அமைந்துவிடும் சாத்தியங்கள் உண்டல்லவா?   ஒற்றை நீள்தொடராக அமைந்துள்ள உங்கள்…

Comments Off on மௌனன் யாத்ரீகா: கேள்விகளுக்கான பதில்கள்.

தொற்றுக்காலக் கவிதைகள்

  1 சுவடுகள்   அவர்கள் ஊர் போய்ச் சேர்ந்துவிட்டார்கள் நிழலற்ற நெடுஞ்சாலைகளில் கொதிக்கும் தாரில் பதித்துச் சென்ற அடிச்சுவடுகள் அப்படியே இருக்கின்றன ராட்சச டயர்களால் அழிபடாச் சுவடுகள். ----- 2 சுவர்கள்   இறுகச் சாத்தித் தாழிட்ட வீட்டுச் சுவர்கள்…

Comments Off on தொற்றுக்காலக் கவிதைகள்

கவிதை மாமருந்து: 16

சிறகுகள் பாரம்! கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா (1970 – 2019) மறைந்துவிட்டார். அதிகம் சந்தித்துக் கொண்டதில்லை. எனினும் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அறிமுகமும் தொடர்பும் இருந்தன. 2000இல் எழுத்தாளர் சுதேசமித்திரனுடன் இணைந்து அவர் ‘ஆரண்யம்’ என்னும் இதழை மிக அழகிய வடிவமைப்பில்…

Comments Off on கவிதை மாமருந்து: 16

கவிதை

குரல்கள் மனிதர்கள் குரல்களாயினர் துர்வாடையற்ற குரல்கள் அழுக்கு பொசுக்கிய குரல்கள் அமுது தோய்ந்து இசைக்கும் அபூர்வக் குரல்கள் ஒரு குரல் பூ மணத்தைக் குழைத்தெடுத்துக் கொண்டு வந்து சேர்கிறது ஒரு குரல் பூரண அன்பில் மூழ்கித் திளைத்து எழுந்து வருகிறது ஒரு…

Comments Off on கவிதை

கவிதை மாமருந்து: 15

தோல்வியில் முடிந்த ஒத்திகை! வரலாற்றை ஒற்றைச் சொல்லால் குறிப்பிடுவதென்றால் ‘அதிகாரம்’ என்று சொல்லலாம். நாட்டை ஆள்வோரிடம் மட்டுமல்ல, சாதாரண மனிதர்களிடமும் அதிகார வேட்கையும் போட்டியும் நிலவுகின்றன. ஒவ்வொரு சிறு செயலிலும் அதிகார வெளிப்பாடு இருக்கிறது. ஒருவர் முன் நிற்கிறோம் என்றால் அது…

Comments Off on கவிதை மாமருந்து: 15

நலம் விசாரிப்பு

நலம் விசாரிப்பு பேச்சைத் தொடங்கும் உபாயம் தீவிரத்தைச் சொல்லும் முன் தயக்கத்தை நீட்டிக்கும் கருவி அன்பை உணர்த்துவதாய்க் காட்டும் காரியசித்தி பழக்க தோஷம் வெற்றுச் சடங்கு நலம் விசாரிப்புச் சொற்களைப் பாவனைகளின் கிடங்கிலிருந்து அவ்வவ்போது கை கொள்ளாமல் அள்ளி ஊதாரியைப் போல…

Comments Off on நலம் விசாரிப்பு

கவிதை மாமருந்து : 14

கை விட்டு இறங்கும் கல் அன்றாடம் எத்தனையோ சம்பவங்களைச் சந்திக்கிறோம்; கடக்கிறோம்; மறந்தும் போகிறோம். அன்றைக்கு நடந்தவற்றை இரவில் அசை போடும் மனம் கோவையாகச் சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வர இயலாமல் குழம்புகிறது. எதை முக்கியம் என்று நினைக்கிறோமோ அது சட்டென…

Comments Off on கவிதை மாமருந்து : 14