கருத்துரிமை : சாதியத்தின் அழகிய வடிவம்
நம்முடையது சாதியச் சமூகம். ஏற்றத்தாழ்வும் ஆதிக்கமும் அதிகாரமும் சாதிப் படிநிலைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளாகச் சாதியத்தின் அடிப்படையிலேயே நிலவிவரும் அதிகாரப் படிநிலை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் பின்பகுதியில் ஓரளவு உடைபடத் தொடங்கியது. விடுதலைக்குப் பின்னர் படிப்படியாக நெகிழ்ந்து வந்தது. பல தலைவர்களின் பங்களிப்பும்…
