பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை | Poonaachi Allathu Oru Vellatin Kathai
தலைப்பு உணர்த்துவதுபோலவே இந்த நாவல் ஒரு வெள்ளாட்டின் வாழ்வைக் கூறுகிறது. ஆடுகளின் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சொல்கிறது. ஆடுகளின் மேல் மனித குணங்களை ஏற்றும் ஆசிரியர் ஆடுகளின் வாழ்வினூடே மனித வாழ்வைப் பேசுவதாகவும் இந்த நாவலை வாசிக்கலாம். பெருமாள்முருகன் தான் வாழும் சமூகத்தையும் அதிலுள்ள மனிதர்களையும் மட்டுமின்றி ஆடுகளைப் பற்றியும் நன்கு அறிந்தவர் என்பதால் இதில் ஆடுகளின் வாழ்வும் மானுட இயல்புகளும் அற்புதமாகத் துலங்குகின்றன. ஆடுகளின் கதையாக வாசிக்கையில் சுவையாகவும் நுட்பமான கூறுகள் நிறைந்ததாகவும் விளங்கும் இந்த நாவல் குறியீட்டுத் தளத்தில் முற்றிலும் வேறொரு வடிவம் எடுத்து வியக்கவைக்கிறது.