அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் 2
அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவோர் தரமான ஆசிரியர்கள். துறைசார் புலமை மிக்கவர்களையே நியமித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் இயல்புக்கேற்ற சுதந்திரச் சிந்தனை கொண்டவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர். நல்ல ஊதியம் வழங்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடைவெளி குறைவு. பாடம் அல்லாது மாணவர் திறனை ஊக்குவிக்கப் பல…