இத்தாலி அனுபவங்கள் 7

சிறுசுமை தரும் சுகப்பயணம் எனக்குக் கண் கட்டுவது போலிருந்தது. கீழே விழுந்துவிடுவேனோ என்றிருந்தது. வந்த விமானத்தில் உண்ண எதுவும் கொடுக்கவில்லை. குடிநீர் மட்டும்தான். இந்த விமானத்தைப் பிடித்துவிட்டால் ஏதாவது கொடுப்பார்கள் என்று நம்பிக்கை இருந்தது. வயிற்றுக்காகவாவது விமானத்தைப் பிடித்துவிட வேண்டும். மூச்சைக்…

3 Comments

இத்தாலி அனுபவங்கள் 6

ஓடுகிறோம், ஓடுகிறோம், ஓடிக்கொண்டேயிருக்கிறோம் பிளோரன்ஸ் நகர இந்தியத் திரைப்பட விழாவில் எழுத்தாளர் சந்திப்புக்காகவே சென்றோம். அது ஒருநாள் மாலை நேர நிகழ்வு. அதற்காக விமானச் சீட்டு, தங்குவதற்கு மூன்று நாள் இடம், உணவு ஆகிய செலவுகளை விழாக்குழு, புத்தகக் கடை, பதிப்பகம்…

1 Comment

அடுக்கத்து ஆடுமயில்

‘தண்டலை மயில்கள் ஆட’ என்னும் கம்பராமாயணப் பாடலைப் பற்றி எழுதிய கட்டுரையை வாசித்துவிட்டு என் மாணவர் அ.ஜெயக்குமார் (தமிழ் உதவிப் பேராசிரியர், மகேந்திரா கலை அறிவியல் கல்லூரி, காளிப்பட்டி) அதைப் போன்ற வருணனை வரும் இரண்டு இடங்களைக் கவனப்படுத்தினார். அவருக்கு நன்றி…

1 Comment

வீற்றிருக்கும் மருதம்!

கம்பராமாயணத்தில் இருந்து அதிகம் மேற்கோள் காட்டிய பாடல் பட்டியல் ஒன்றை எடுத்தால் பாலகாண்டம் நாட்டுப் படலத்தில் மருத நில வருணனையாக வரும் 'தாமரை விளக்கம் தாங்க' என்னும் பாடல் முதல் பத்துக்குள் வரும் என்று நினைக்கிறேன். யாப்பிலக்கணத்தில் அறுசீர் ஆசிரிய விருத்தத்திற்குச்…

4 Comments

பச்சைமைக் கையொப்பம்

சென்னை சென்றால் நண்பரும் மாநிலக் கல்லூரி முதல்வருமான இரா.இராமனிடம் (கல்யாணராமன்) இருந்து தப்பிப்பது கடினம். மிகப் பெரும் இலக்கியப் பணிகளை எல்லாம் போகிறபோக்கில் செய்துவிடும் ஆற்றல் பெற்றவர். ஆத்மாநாம் கவிதைகள் பற்றிய விமர்சன நூல், தி.ஜானகிராமன் படைப்புகள் குறித்த கட்டுரைகளின் பெருந்தொகுப்பு ஆகியவற்றை…

3 Comments

அப்பேர்ப்பட்ட ஆசிரியர் – 2

ஆசிரியரின் சொந்த வாழ்க்கைப் பிரச்சினை எதுவானால் மாணவருக்கு என்ன? எங்கள் எட்டாம் வகுப்பு ஆசிரியர் அறிவியல் பாடத்தை மிக எளிமையாகச் சொல்லிக் கொடுப்பார். மரத்திலான ஸ்டேண்டில் நிறுத்தி வைத்த கரும்பலகைதான் எங்கள் வகுப்பில் இருந்தது. மூன்று துண்டுகளை இணைத்த கரும்பலகை. ஊமத்தை…

5 Comments

அப்பேர்ப்பட்ட ஆசிரியர் – 1

என் உயர்நிலைப் பள்ளிப் படிப்புக் காலத்தில் பல ஆசிரியர்கள் நன்றாகப் பாடம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் மாணவர்களை நன்றாக நடத்தினார்கள் என்று சொல்ல முடியாது. சிலரை நினைத்தால் கடுகடு முகங்களே முன்னால் வருகின்றன. சிலர் எதிரில் வந்தால் ஓடி ஒளிந்து கொள்வோம். பள்ளிக்கு வெளியில் எங்காவது காண…

1 Comment