பாலும் அழுக்கும்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் சங்க இலக்கியத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு. விடுதலைக்கு முன்  ‘எங்களுக்கும் பழமை இருக்கிறது. இலக்கியம், பண்பாடு எல்லாவற்றிலும் தொன்மை மிக்கவர்கள் நாங்கள்’ என்று ஆங்கிலேயர்களுக்கு உணர்த்தச் சங்க இலக்கியத்தை அறிஞர்கள் ஆதாரமாக்கினர்.  ‘ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு…

1 Comment

தாமஸ் வந்தார்!

தாமஸ் ஹிட்டோஷி ப்ரூக்ஸ்மா (செல்லமாக ‘டாம்’) அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் வசிப்பவர். தாய்வழிப் பூர்விகம் ஜப்பான். தந்தை வழி நெதர்லாந்து. டாம் அமெரிக்கக் குடிமகன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மாணவப் பருவத்தில் தமிழ் கற்கக் கிடைத்த நிதிநல்கை ஒன்றின் வழியாகத் தமிழ்நாட்டுக்கு…

3 Comments

கம்பராமாயணத்தில் உலக வழக்கு – 2

பாலகாண்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ‘தாடகை வதைப் படலம்.’ அதில் பயிலும் சொற்கள் தமிழ் மொழியின் எல்லாவகை அழகும் பொங்க அமைந்தவை.  தாடகையைக் கொல்ல இராமன் தயங்குகிறான். அப்போது அவள் எவ்வளவு கொடியவள் என விசுவாமித்திரர் இராமனுக்கு எடுத்துச் சொல்கிறார்.  அதில்…

4 Comments

கம்ப ராமாயணத்தில் உலக வழக்கு – 1

தமிழ்க் காப்பிய இலக்கியத் தொடக்கம் சிலப்பதிகாரம். தொடர்ந்தவை மணிமேகலை, பெருங்கதை. மூன்றும் ஆசிரியப்பாவால் ஆனவை. ஆசிரியப்பா உரைநடைத் தன்மை கொண்டது. உணர்ச்சி விவரணைகளுக்கு இடமில்லாமல் கதையைச் சொல்வதற்கு ஆசிரியப்பா ஏற்றது. அதன் போதாமையை உணர்ந்த இடங்களில் விருத்தப்பாக்களை இளங்கோவடிகள் கையாண்டிருக்கிறார். விருத்தப்பாவை…

1 Comment

முத்தொள்ளாயிரம்: கரையுறிஞ்சி மீன்பிறழும்

எழுதிய கவிஞர் பெயர் தெரியாத பழந்தமிழ் இலக்கிய நூல்கள் பலவுண்டு. கவித்துவத்தின் சிகரம் என்று சொல்லக்கூடிய நூலுக்குக்கூட எழுதியவர் பெயர் தெரியாத அவலம் அனேகமாகத் தமிழில்தான் நடக்கும். அப்படி ஒரு நூல் முத்தொள்ளாயிரம். தொள்ளாயிரம் பாடல்கள் என்றும் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள்…

3 Comments

நாத்தினவு தீராத மகாவித்துவான்

தமிழ்ப் புலமை மரபின் கடைசிக்கண்ணியாக விளங்கியவர் திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். உ.வே.சாமிநாதையர் எழுதிய  வாழ்க்கை வரலாற்று நூல் மூலம் நிலைபெற்றிருக்கும் இவர் தல புராணங்கள் பலவற்றை இயற்றியுள்ளார். பிள்ளைத்தமிழ், கலம்பகம், உலா உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் பலவும் இவர் இயற்றியவை. கிட்டத்தட்ட…

2 Comments

கரம்பா? கரும்பா?

கம்பராமாயணப் பாலகாண்டம் நாட்டுப்படலத்தில் மருத நில வளத்தை வருணிக்கும் இப்பாடலின் சிறப்பு பற்றி ஏற்கனவே கட்டுரை எழுதியிருந்தேன்.  இதில் பேச வேண்டிய செய்திகள் இன்னும் உள்ளன. வரம்பெலாம் முத்தம்; தத்தும் மடையெலாம் பணிலம்; மாநீர்க் குரம்பெலாம் செம்பொன்; மேதிக் குழியெலாம் கழுநீர்க்…

3 Comments