• ஏறு வெயில் | Aeru Veilஏறு வெயில் | Aeru Veil Quick View
    • ஏறு வெயில் | Aeru Veilஏறு வெயில் | Aeru Veil Quick View
    • ஏறு வெயில் | Aeru Veil

    • நகர்மயமாவதன் ஒரு கூறாகக் காலனி உருவாக்கத்தால் இடம்பெயர்ந்து வாழும் கிராமத்துக் குடும்பம் ஓன்று எதிர்கொள்ளும் சிக்கல்களால் கையில் விழுந்த பனிக்கட்டிகளாய் உறவுகள் கரைவதையும் அதனால் மனிதர்களின், அதுவரை தெரியாத, கோரமுகங்கள் வெளிப்படுவதையும் தன் கொங்குத் தமிழில் பெருமாள்முருகன் சித்தரிக்கிறார். புதியவற்றின் வருகை நிகழ்த்தும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள இயலாத மனநிலைக்கும் அவற்றைத் தவிர்க்க முடியாத சூழலுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் மனிதர்களின் மனமொழியை நமக்குக் காட்சிப்படுத்துகிறார் முருகன், இன்னமும் வெம்மை குறையாத 'ஏறுவெயில்' நேரான எதார்த்தக் கதைசொல்லலின் முக்கியத்துவத்தை மீண்டும் நிரூபிக்கிறது.
    Read more
  • நெடுநேரம் | Neduneram Quick View
    • நெடுநேரம் | Neduneram Quick View
    • நெடுநேரம் | Neduneram

    • பொதுமுடக்கம் என்னும் தற்காலிக நிகழ்வைப் பின்புலமாகக் கொண்ட இந்த நாவல் மனித வாழ்வின் நிரந்தரமான சில பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது. நாவலில் இரண்டு பயணங்கள் வருகின்றன. ஒன்று சாலைகளினூடே மேற்கொள்ளும் புறப் பயணம். இன்னொன்று வாழ்வினூடே மேற்கொள்ளும் அகப் பயணம். நாவலின் கதையாடலில் இரண்டும் ஒன்றையொன்று பாதித்தபடி இணைகோடுகளாகப் பயணிக்கின்றன. காதல் பற்றிய விழுமியங்களை யதார்த்த வாழ்வின் தவிர்க்க முடியாத இயல்புகளின் பின்புலத்தில் வைத்துப் பரிசீலிக்கிறது இந்த நாவல். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எழும் இயல்பான ஈர்ப்புக்கு நடுவே நுழைய யத்தனிக்கும் பல்வேறு கூறுகளின்…
    Amazon
  • கழிமுகம் | Kazhimugam Quick View
    • கழிமுகம் | Kazhimugam Quick View
    • கழிமுகம் | Kazhimugam

    • பால்யத்தையும் இளமையின் எச்சங்களையும் தொடர்ந்தெழுதும் தமிழ் வழமையிலிருந்து விலகிச் சமகாலத்தைப் புனைவாக்கிப் பெருமாள்முருகன் முன்நகர்ந்திருக்கிறார். ஆவணப்பதிவின் நம்பகத் தன்மையைத் தாண்டிக் கலை நுண்மையின் அடியாழங்களுக்குள் ‘கழிமுகம்’ பயணிக்கிறது. ஒரு தந்தை மகன் உறவுக்குள் நவீனச் சமூகம் உருவாக்கும் இறுக்கத்தையும் பதற்றத்தையும், பழைமைக்குள் மூழ்கித் தொலையாமல், புதுப்புனலாடும் தீவிரத்தோடும் சுழிமாறிப்போகாத மூச்சிழுப்போடும் இப்புனைவு கடந்திருக்கிறது. இயற்கைக்கும் மனிதனுக்குமான தொல்லுறவின் அபேதத்திலிருந்து இருப்பின் பரபரப்பை எதிர்கொள்ளும் எளிய ஒளி கூடும்போது, மகனும் தந்தையும் அவரவர் இடத்தில் காலூன்றியபடியே காலத்தையும் கல்வியையும் பார்த்துச் சிரிக்கிறார்கள். இப்புன்னகையின் உக்கிரமே ‘கழிமுகம்’.…
    Amazon
  • பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை | Poonaachi Allathu Oru Vellatin Kathaiபூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை | Poonaachi Allathu Oru Vellatin Kathai Quick View
    • பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை | Poonaachi Allathu Oru Vellatin Kathaiபூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை | Poonaachi Allathu Oru Vellatin Kathai Quick View
    • பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை | Poonaachi Allathu Oru Vellatin Kathai

    • தலைப்பு உணர்த்துவதுபோலவே இந்த நாவல் ஒரு வெள்ளாட்டின் வாழ்வைக் கூறுகிறது. ஆடுகளின் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சொல்கிறது. ஆடுகளின் மேல் மனித குணங்களை ஏற்றும் ஆசிரியர் ஆடுகளின் வாழ்வினூடே மனித வாழ்வைப் பேசுவதாகவும் இந்த நாவலை வாசிக்கலாம். பெருமாள்முருகன் தான் வாழும் சமூகத்தையும் அதிலுள்ள மனிதர்களையும் மட்டுமின்றி ஆடுகளைப் பற்றியும் நன்கு அறிந்தவர் என்பதால் இதில் ஆடுகளின் வாழ்வும் மானுட இயல்புகளும் அற்புதமாகத் துலங்குகின்றன. ஆடுகளின் கதையாக வாசிக்கையில் சுவையாகவும் நுட்பமான கூறுகள் நிறைந்ததாகவும் விளங்கும் இந்த நாவல் குறியீட்டுத் தளத்தில் முற்றிலும் வேறொரு வடிவம்…
    Amazon
  • ஆலவாயன் | Aalavaayanஆலவாயன் | Aalavaayan Quick View
    • ஆலவாயன் | Aalavaayanஆலவாயன் | Aalavaayan Quick View
    • ஆலவாயன் | Aalavaayan

    • ‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும் மன உணர்வுகளையும் காணும் நோக்கு நாவல் ‘ஆலவாயன்.’ உறவுகள் சார்ந்த கேள்விகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓயாமல் எழுவதையும் அதைக் கடக்க மனிதர்கள் படும் பாடுகளையும் காட்சிச்…
    Amazon
  • அர்த்தநாரி | Arthanaariஅர்த்தநாரி | Arthanaari Quick View
    • அர்த்தநாரி | Arthanaariஅர்த்தநாரி | Arthanaari Quick View
    • அர்த்தநாரி | Arthanaari

    • ‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை. இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கினாலும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்யும் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. பெண் மீது ஆண் கொள்ளும் உடைமை உணர்வின் காரணமாக ஏற்படும் உறவுச் சிக்கல்களைப் பேசுகிறது ‘அர்த்தநாரி.’ அதனால் உருவாகும் விழுமியங்களும் மனித மனங்களை அலைக்கழிக்கும் விதத்தை நாவல் பற்றிச் செல்கிறது. Perumal Murugan has created the novels…
    Amazon
  • PookuzhiPookuzhi Quick View
    • PookuzhiPookuzhi Quick View
    • Pookuzhi

    • Perumal Murugan's novel takes an insightful look into the struggles and triumphs of inter-caste love and marriage. It sheds light on the social and cultural nuances that come with these unions, while asking thought-provoking questions about the issues that arise from them. An inspiring story of how two lovers can overcome any obstacle, this novel is a must-read for anyone…
    Amazon
  • ஆளண்டாப் பட்சி | Aalandaa Patchi Quick View
    • ஆளண்டாப் பட்சி | Aalandaa Patchi Quick View
    • ஆளண்டாப் பட்சி | Aalandaa Patchi

    • பெருமாள்முருகனின் ஆறாவது நாவல்இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும் சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக் கொள்ளலாம்; பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்ப்பந்தத்தால் விடுபட்டுப் புலம்பெயர்ந்து வேற்றிடத்தில் நிலைகொள்ளும் உழவுக் குடும்பம் ஒன்றின் போராட்டமே இந்நாவல். மனிதர்களை அண்ட விடாத அதே சமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட பிரம்மாண்டமான பறவையாகக் கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளண்டாப் பட்சியின் இயல்புகள் இந்நாவல் மாந்தர்கள் பலருக்கும் பொருந்திப் போகின்றன.
    Amazon
  • கங்கணம் | Kanganam Quick View
    • கங்கணம் | Kanganam Quick View
    • கங்கணம் | Kanganam

    • என் வாழ்வில் அறியாமல் நான் நிகழ்த்திய அற்புதம் என ஏதாவது ஒன்று இருக்குமானால் அது ‘கங்கணம்’தான். எப்படி இது நிகழ்ந்தது என வியப்படைவதுண்டு. என் அறிதலும் புரிதலும் உணர்தலும் ஒருங்கிணைந்து உருப்பெற்ற நாவல் இது. புறத்தில் உலவிக்கொண்டே அகத்திலும் பயணம் செய்ய முடியம் என்னும் நம்பிக்கையை இதன் மூலம் பெற்றேன். இது ஒரு பிரவாகம். பிரவாகத்தில் எதுவும் விடுபடுவதில்லை. மேலும் என் மொழியில் ஏற்பட்ட பெரும் உடைவு இதன் வழியே ஏற்பட்டது. கங்கணத்திற்கு முன் கங்கணத்திற்குப் பின் என என் எழுத்தைப் பிரிக்க நிலைக்கல்லாக…
    Kindle
  • கூள மாதாரி | Kuula Maataari Quick View
    • கூள மாதாரி | Kuula Maataari Quick View
    • கூள மாதாரி | Kuula Maataari

    • என் நாவல்களில் ‘கூளமாதாரி’யைப் போல நான் லயித்து எழுதிய நாவல் பிறிதொன்றில்லை. காரணம் அதன் களம். என் பால்யம் இன்றைக்கும் வாழும் களம் அது. கூரைகளின் கீழ் வாழும் காலம் இது. ஆனால் எப்பேர்ப்பட்ட கூரையும் எனக்குச் சங்கடமே தரும். உடைத்து வெளியேறிவிடும் தவிப்பை அடைவதுண்டு. ஏதுமற்ற வெளியே என் ஆதர்சம். வெயில், மழை, குளிர், பனி, காற்று, பொழுது, நிலவு, மலை, புழுதி, பசுமை, வறள் எல்லாம் கூடிக் கலந்த என் மனவெளி அது. அதை உணரும் பேற்றை எனக்கு வழங்கியது இந்நாவலின்…
    Buy on Amazon
  • நிழல்முற்றம் | Nizhal Mutram Quick View
    • நிழல்முற்றம் | Nizhal Mutram Quick View
    • நிழல்முற்றம் | Nizhal Mutram

    • என் நாவல்களில் அணுக்கமான வாசகர்களைப் பெற்றுத் தந்தது ‘நிழல்முற்றம்.’ விவரணை குறைந்தும் நுட்பம் மிகுந்தும் இருப்பதுதான் அதற்குக் காரணம் என நான் நினைப்பதுண்டு. எதையும் விவரிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. இதை எழுதும்போது அதற்கு எப்படியோ தடை விழுந்துவிட்டது. இதன் களமும் கதை சொல்லக்கூடாது என்று கொண்ட தீர்மானமும் விவரணையைத் தவிர்க்கச் செய்திருக்கலாம். இப்போது இத்தனை சிக்கனமாகச் சொற்களைப் பயன்படுத்தும் மனம் வாய்க்காது என்றே நினைக்கிறேன்.
    Buy on Amazon
  • கெட்ட வார்த்தை பேசுவோம் | Ketta Varthai Peasuvom Quick View
    • கெட்ட வார்த்தை பேசுவோம் | Ketta Varthai Peasuvom Quick View
    • கெட்ட வார்த்தை பேசுவோம் | Ketta Varthai Peasuvom

    • சமூக, பண்பாட்டு, மொழி, வரலாற்று ஆய்வுக்கு மனிதச் செயல்பாடுகளின் எந்தப் பகுதியும் விலக்காக இருக்க முடியாது. மனித வாசனை மூக்கை எட்டியதும் இரை கிட்டியதென மகிழும் தேவதைக் கதை அரக்கனைப் பற்றிப் பிரெஞ்சு வரலாற்றாசிரியர் மார்க் பிளாக் குறிப்பிடுவார். சமூகவியல் ஆய்வாளர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். மனித வாழ்க்கை தொடர்புடைய எதுவாயினும் அது ஆய்வுத் தேட்டத்தைக் கிளர்த்த வேண்டும். கெட்ட வார்த்தைகளிலிருந்து வீசுவதோ மனிதத் துர்வாடை. ‘கெட்ட வார்த்தை பேசுவோம்' இதைக் கவனப்படுத்திக் கெட்ட வார்த்தைகள் பற்றிய ஆய்வுக்குக் கதவு திறந்திருக்கிறது. பெருமாள்முருகனை நினைத்துப்…
    Buy on Amazon
  • CURRENT SHOW (Nizhal Muttram) Quick View
    • CURRENT SHOW (Nizhal Muttram) Quick View
    • CURRENT SHOW (Nizhal Muttram)

    • Set in a small highway town in South India, Current Show revolves around Sathi, a young soda-seller in a run-down theatre. This is life lived on the margins of the film world, far beyond glitz and glitter of Tamil cinema.
    Read more
  • SEASONS OF THE PALM (Koolamaathari) Quick View
    • SEASONS OF THE PALM (Koolamaathari) Quick View
    • SEASONS OF THE PALM (Koolamaathari)

    • Seasons of the Palm tells the story of Shortie and his friends –Tallfellow, Stumpleg, Belly and Matchbox – all of them ‘untouchable’ chakkili children who herd goats for their Gounder caste landlords. A sophisticated mixture of naturalism and fantasy, this is a novel whose politics comes alive through its art. Shortlisted for the Kiriyama Award (2005 fiction finalist).
    Read more
  • PYRE (Pookkuzhi) Quick View
    • PYRE (Pookkuzhi) Quick View
    • PYRE (Pookkuzhi)

    • With spare, powerful prose, Murugan masterfully conjures a terrifying vision of intolerance in this devastating tale of innocent young love pitted against chilling savagery. Long listed for the DSC prize for South Asian Literature.
    Read more
  • Placeholder Image
    • Placeholder Image
    • One Part Woman

    • The American debut of a world-class writer, already profiled by the New York Times, One Part Woman is a charming and touching story of a South Indian couple who cannot conceive, and the extraordinary efforts they make to please their family and try to have a baby.
    Read more