• எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் கலந்துரையாடல்

    Reuben Hoar Library 35 Shattuck St, Littleton, MA

    October 3 @ 4:00 pm - 7:00 pm EDT. எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் கலந்துரையாடல். Reuben Hoar Library 35 Shattuck St, Littleton, MA. சங்கமம் வழங்கும் சிறப்பு இலக்கிய நிகழ்வு!!எழுத்தாளரைச் சந்திப்போம்! படைப்புகளைக் கொண்டாடுவோம்! தமிழின் முக்கிய சமகால எழுத்தாளர்களில் ஒருவரான எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாட, சங்கமம் உங்களை அன்புடன் அழைக்கிறது. அவரது படைப்புகள், எழுத்துப் பயணம், தமிழ் இலக்கியம் மற்றும் வாசிப்பு அனுபவங்கள் குறித்து உரையாடவும், அவரிடம் நேரடியாகக் கேள்விகள் கேட்கவும் இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் நேசிக்கும் அனைவரும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்துகொண்டு, இந்த இலக்கியச் சந்திப்பைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

  • டல்லாஸ் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம்

    Collin College Technical Campus 2550 Bending Branch Way, Allen, United States

    October 10 @ 2:00 pm - 6:00 pm CDT. டல்லாஸ் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம். Collin College Technical Campus, 2550 Bending Branch Way, Allen, United States. எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுடன் ஒரு சிறப்பு இலக்கியத் திறனாய்வுக் கருத்தரங்கம். வாசகர் பார்வையில் பெருமாள் முருகன். வாசிப்போம் • சிந்திப்போம் • உரையாடுவோம். இது ஆய்வாளர்களுக்கான கல்வியியல் மாநாடு மட்டுமல்ல. வாசகர்கள் தங்கள் வாசிப்பையும் பார்வையையும் மற்ற வாசகர்களுடனும் எழுத்தாளருடனும் பகிர்ந்துகொள்ளும் இலக்கிய அரங்கம்.

  • தமிழில் படைப்பெழுத்துப் பயிலரங்கம்

    PARR Library 6200 Windhaven Pkwy, Plano, United States

    October 11 @ 1:30 pm - 3:30 pm CDT. தமிழில் படைப்பெழுத்துப் பயிலரங்கம். PARR Library 6200 Windhaven Pkwy, Plano, United States. ஒரு சிறுகதை எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? உங்கள் அனுபவங்களை இலக்கியமாக மாற்ற விரும்புகிறீர்களா? தமிழில் எழுதத் தொடங்கியிருக்கிறீர்களா? இளம் படைப்பாளர்கள், வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் மற்றும் தமிழில் படைப்பெழுத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக அவ்வை தமிழ் மையம் இந்தச் சிறப்புப் பயிலரங்கத்தை ஏற்பாடு செய்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகனிடமிருந்து படைப்பெழுத்தின் நுட்பங்களை அறிந்துகொள்ளவும், அவருடன் நேரடியாக உரையாடவும் இது ஓர் அரிய வாய்ப்பு.