குஞ்சுக்கோழி
கட்டுரை ஒன்றில் ’மீன் குழம்பு’ என்று எழுதினேன். தொடர்ந்து எழுதி வரும்போது அதில் உள்ள இருசொற்களையும் முறை மாற்றிக் ‘குழம்பு மீன்’ என்று எழுத வேண்டி வந்தது. மீன் குழம்பு, குழம்பு மீன் ஆகியவை ஒரே பொருள் கொண்டவை அல்ல.…
கட்டுரை ஒன்றில் ’மீன் குழம்பு’ என்று எழுதினேன். தொடர்ந்து எழுதி வரும்போது அதில் உள்ள இருசொற்களையும் முறை மாற்றிக் ‘குழம்பு மீன்’ என்று எழுத வேண்டி வந்தது. மீன் குழம்பு, குழம்பு மீன் ஆகியவை ஒரே பொருள் கொண்டவை அல்ல.…
போர்த்தொழில் – போர்தொழில் ‘போர்த்தொழில் பழகு’ என்பது பாரதியாரின் ‘புதிய ஆத்திசூடி’யில் வரும் தொடர். இருநாட்டுப் படை வீரர்கள் எதிரெதிர் நின்று போரிடும் தொழிலைப் பாரதியார் கருதியிருக்கலாம். அவர் காலத்தில் முதலாம் உலகப் போர் நடைபெற்றது. படைகள் மோதிக்கொண்ட…
ம.இலெ.தங்கப்பா – எம்.எல்.தங்கப்பா ஆகலாமா? மறைந்த தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்களைச் சாகித்திய அகாதமி நூலாக வெளியிட்டுள்ளது. புதுவை யுகபாரதி தொகுப்பாசிரியராக உள்ள அந்நூலின் தலைப்பு ‘எம்.எல்.தங்கப்பாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்கள்’ என்று அமைந்திருக்கிறது. அந்நூலுக்கான மதிப்புரை நிகழ்ச்சி…
‘தி கேரளா ஸ்டோரி’ என்னும் மலையாளத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்னும் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. திரைப்படம் இன்று தமிழ்நாட்டிலும் வெளியாகிறது. படத்தில் எத்தகைய கருத்திருந்தாலும் சரி, அதை வெளியிடத் தடை விதிப்பது கருத்துரிமைக்கு எதிரானது. அதேசமயம் ‘தடை செய்ய வேண்டும்’…
கவிஞர் இசைக்கு வாழ்த்துக்கள். குடியரசு தினத்தை ஒட்டித் தில்லியில் நடைபெற்ற ‘இந்தியக் கவி சம்மேளனம்’ நிகழ்வில் தமிழின் சார்பாகக் கவிதை வாசித்திருக்கிறார். வரும் குடியரசு தினத்தன்று வானொலியில் ஒலிபரப்பாக உள்ளது. மகிழ்ச்சி. தலைநகரப் பயணம் சிறந்திருக்கும் என நம்புகிறேன். ‘வருக…
தமிழ்நாட்டு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் 2023ஆம் புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அச்செய்தி இணைய இதழ்களில் வந்துள்ளது. ‘மின்னம்பலம்’ இதழ் (31-12-22) ‘கனவை நினைவாக்க உழைக்க வேண்டும்: முதல்வர் புத்தாண்டு வாழ்த்து’ எனத் தலைப்பிட்டிருந்தது. உள்ளே ‘உயரிய லட்சியங்களை…
‘அறைக்கலன்’ தொடர்பாகச் சமூக ஊடகங்களில் வெளியான விவாதங்களை ஒட்டி ஜெயமோகன் எழுதியுள்ள குறிப்பு ஒன்றில், ‘அண்மையில் மிக நம்பத்தகாதவராகவும், காழ்ப்புகள் மட்டுமே கொண்டவராகவும் மாறியிருப்பவர் பெருமாள் முருகன்தான். இன்று மனுஷ்யபுத்திரனுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட பெருமாள் முருகனுக்கு கிடையாது. அப்படிப்பட்ட…