கு.ப.ராஜகோபாலன் என்னும் கரிச்சான்
இன்று மார்கழி ஏழாம் நாள். திருப்பாவை ஏழாம் பாசுரம் இது: கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?…