அரிசீம்பருப்பு

  திருப்பதில் லட்டுக்குப் பயன்படும் நெய் பற்றிய பிரச்சினை ஓய்ந்துவிட்டது.  தீபாவளிக்கு லட்டு சாப்பிட்டு மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் நாள் இது. இனிப்புக் கடைகளில் எல்லாம் எத்தகைய நெய்யால் லட்டு செய்கிறார்கள் என்பது பற்றி யாருக்கும் கேள்வியில்லை. ‘சுத்தமான நெய்யில் செய்தது’…

2 Comments

எவ்வளவு காலம் ஆகும்?

கடந்த வாரம் மதிய உணவுக்காக உணவகம் ஒன்றுக்குச் சென்றேன். சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் என்னை நோக்கி ஒருவர் வந்தார். ‘பெருமாள்முருகன் சார் தானுங்களா?’ என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். நாமக்கல்லிலும் இலக்கிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்று நான் நம்ப வேண்டும் என்பதற்காகவே…

5 Comments

மார்க் ட்வைன் வீடு

    மு.இராமனாதனின் ‘ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’ கட்டுரைத் தொகுப்பைப் பற்றி நேற்று எழுதியிருந்தேன். அதன் தலைப்புக் கட்டுரை லண்டனில் உள்ள  ஷெர்லக் ஹோம்ஸ் நினைவில்லத்தைப் பார்வையிட்ட அனுபவத்தைப் பேசுகிறது. எழுத்தாளர் ஆர்தர் கானன் டாயில் உருவாக்கிய கதாபாத்திரம் ஷெர்லக்…

1 Comment

கொச்சியில் முழுமையான நாள்

மலையாளக் கவிஞர் சியாம் சுதாகர் அழைப்பின் பேரில் கொச்சியில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரி (Sacred Heart College) நிகழ்வில் கடந்த 03-10-24 வியாழன் அன்று பங்கேற்றேன். சென்னை, மாநிலக் கல்லூரியிலும் சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையிலும் பயின்றவர் சியாம் சுதாகர். …

0 Comments

தனியார் நிறுவனத்திலும் இந்தி

பொதிகைத் தொலைக்காட்சி (DD தமிழ் என்று ‘தமிழ்’ சேர்த்தது சாதனையாம். ‘பொதிகை’ தமிழ் இல்லையோ?) சார்பில் நடைபெற்ற இந்தி மாத நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். அந்நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்னும் அடியை விட்டுவிட்டுப் பாடியது தொடர்பான சர்ச்சை பெரிதாகி உள்ளது. அவ்வடியைப் பாடியோர் மறந்துவிட்டுப் பாடியிருக்கலாம்; ஆளுநருக்குப் பிடிக்கும் என்று நினைத்து வேண்டுமென்றே விட்டுமிருக்கலாம். எப்படியோ இப்போது பலகோணப் பிரச்சினையாக மாறியிருக்கிறது.

1 Comment

 ‘பெரிய மாளிகை அது’

  சென்னையில் இந்த ஆண்டு மழைக்காலமும் பெருமழை வெள்ளத்தோடு தொடங்கியிருக்கிறது. தண்ணீர் தேங்குவது, வெள்ளம் வடியாமை ஆகியவற்றுக்கான காரணம் பற்றி நிபுணர்கள் பலவிதமாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதற்குச் சாலை மட்டம் உயர்ந்தும் வீடுகளின் மட்டம் தாழ்ந்தும் இருப்பது முக்கியமான…

Comments Off on  ‘பெரிய மாளிகை அது’