அல்லயன்ஸ் இலக்கிய விழா – 2

மறுநாள் வாடிவாசல் கிராபிக் நாவல் பற்றிய அமர்வு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியான அந்நூல் வாசகர் கவனத்தைப் பெரிதும் பெற்றது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இப்போது வெளியாகியுள்ளது. அதையொட்டித் தனியமர்வு. நானும் ஓவியர் அப்புபனும் பங்கேற்றோம். ஒருங்கிணைத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்த் தட்சிணாமூர்த்தி. அப்புபன் சிறுதிரையிடலையும்…

1 Comment

அல்லயன்ஸ் இலக்கிய விழா – 1

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, கல்விக்கும் பெங்களூரு பிரபலம். நகருக்குள்ளும் புறநகர்ப் பகுதிகளிலும் பல தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன; கல்லூரிகளும் அதிகம். கலை அறிவியல் துறைகளில் விதவிதமான படிப்புகள் இங்கே உள்ளன. ஆங்கிலத் துறை உள்ள நிறுவனங்களில் என் படைப்புகளைப் பாடத்தில் வைக்கிறார்கள். ஆய்வுத் திட்டக் கட்டுரை…

1 Comment

இத்தாலி அனுபவங்கள் 5 : இத்தாலி மருமகள்

இத்தாலியின் வடபகுதியில் உள்ள பிரெசியா என்னும் ஊரில் சங்கீதா வசிக்கிறார். அங்கிருந்து ரயிலில் பிளோரன்ஸ் வர இரண்டரை மணி நேரமாகும். அன்று அதிகாலை ரயிலேறி ஒன்பதரை மணிக்கெல்லாம் ஹோட்டலுக்கு வந்துவிட்டார். நாங்களும் தயாராக இருந்தோம். நேரில் முதல்முறையாகச் சந்திக்கிறோம். வெகுநாள் பழகியவர்…

2 Comments

இத்தாலி அனுபவங்கள் 4 : இணையம் தந்த நட்பு

நண்பர்களே! இத்தாலிப் பயணம் பற்றி ஏற்கனவே மூன்று கட்டுரைகள் எழுதியிருந்தேன். எதிர்பாரா வகையில் நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. முந்தைய கட்டுரைகளை வாசித்தோர் முதல் மூன்றையுமோ மூன்றாவதை மட்டுமோ ஒருமுறை பார்வையிட்டுவிட்டு இதைப் படியுங்கள். அவற்றை வாசிக்காதோர் வாசித்துவிட்டு இதற்கு வாருங்கள். தொடர்ச்சி…

2 Comments

சூறை! சூறைதான் அது! – 8

யூமாவாசுகி எழுதியுள்ள கதைகளும் கொந்தளிப்பு மனநிலையின் இயல்புடையவையே. ஒரு கதையைப் பார்க்கலாம்.  அந்த கதை  ஒரு சொல்லில் இருந்து  உருவானது. ‘வான்நிதி’ என்று ஒரு சிறுகதை ‘உயிர்த்திருத்தல்’ தொகுப்பில் இருக்கிறது.  ‘வான்நிதி’ என்னும் சொல்  கிளர்த்திய ஒரு மனநிலையைத்தான் அந்தக் கதையாக…

0 Comments

சூறை! சூறைதான் அது! – 7

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரச்சினையிலும் யூமாவின் பணி பறிக்கப்பட்டதற்கு நேரடிக் காரணம் நானல்ல. எனினும் ஏற்கனவே ‘குதிரை வீரன் பயணம்’ நின்று போனது,  ‘தினமணி’யிலிருந்து வெளியேறியது ஆகியவற்றில் ஏதோ ஒருவகையில் எனக்குத் தொடர்பிருந்ததால் இதையும் அப்படியே கருத வேண்டியானது. அப்பிரச்சினையைக்…

1 Comment

சூறை! சூறைதான் அது! – 6

பின்னர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் மாத ஊதியத்திற்குப் பணியில் சேர்ந்தார். சில ஆண்டுகள் அங்கே தொடர்ந்து பணியாற்றினார்.  அங்கிருந்த போது பல நூல்களை மொழிபெயர்த்தார். அத்துடன் அந்நிறுவனம் சார்பாக வெளிவரும் ‘உங்கள் நூலகம்’ இதழ்ப் பணியையும் பார்த்துக் கொண்டிருந்தார். …

4 Comments