பறக்கும் கூந்தல் 1 : ‘இதையும் எழுதுங்கள்’

 சமீப காலமாகக் கல்லூரி நிகழ்வுகளில் என்னைப் பேச அழைப்பது கூடியிருக்கிறது. குறிப்பாக ஆங்கிலத் துறையினர். பெரும்பாலான நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் தன்னாட்சிக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றைப் பாடத்தில் வைத்துள்ளனர். முதுகலை படிக்கும் மாணவர்கள் தம் திட்டக்கட்டுரை எழுத தமிழ்நாட்டு நாவலாக இருந்தால்…

0 Comments

தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 3

மீண்டும் 2021இல் திமுக ஆட்சி வந்த பிறகும் ஏனோ அதில் அரசின் கவனம் செல்லவில்லை. மக்களிடம் போதுமான வரவேற்பு இல்லை என்று கருதினார்களோ என்னவோ. பொறியியல் துறை சார்ந்த துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் சிலர் தமிழ் வழிக் கல்விக்கு ஆதரவாக இல்லை. அதுவும்…

0 Comments

தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 2

ஒவ்வொரு துறை பாடநூல்கள் சார்ந்தும் ‘குறிப்பு நூல்கள்’ பலவும் புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன. அவை குறிப்பிட்ட ஆசிரியர் பெயரில் அமைந்தவை அல்ல. ஒரு பதிப்பகம் பாடத்திட்ட அலகுகளைச் சிலரிடம் பிரித்துக் கொடுத்துப் பாடம் எழுதித் தரச் சொல்லி வாங்குகிறது. ஓரலகுக்கு இவ்வளவு…

1 Comment

தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 1

சமீபமாகத் தமிழ் வழிக் கல்வி தொடர்பான அக்கறை ஒன்றிய அரசுக்குக் கூடியிருக்கிறது. பொறியியல் கல்வியைத் தமிழில் படிக்க ஏற்பாடு செய்யவில்லை என்று உள்துறை அமைச்சர் சொன்னார். ஏற்கனவே தமிழில் பொறியியல் படிப்புகள் இருக்கின்றன, விரும்பும் மாணவர்கள் அதைத் தேர்வு செய்து சேர…

2 Comments

வாசகருக்கு வழிகாட்டும் பதிப்பு 2

நாட்குறிப்பிலிருந்து சில சொற்களைப் பார்க்கலாம். ‘இனிமேல் உம் மீது சண்டை போட்டுக் கத்தி எடுப்பதில்லை என்று நாம் உமக்கு வார்த்தைப்பாடு கொடுக்கச் சொல்கிறோம்’ (ப.192). இதில்  ‘வார்த்தைப்பாடு’ என்னும் சொல் இன்றைய வழக்கில் ‘உறுதிமொழி’ என்பதைக் குறிக்கிறது. உறுதிமொழி எப்போது வழக்கிற்கு…

0 Comments

வாசகருக்கு வழிகாட்டும் பதிப்பு 1

பிரெஞ்சுக் காலனியாக புதுச்சேரி இருந்த காலத்தில் கவர்னரின் மொழிபெயர்ப்பாளராகப்  (துபாஷி) பணியாற்றிய ஆனந்த ரங்கப்பிள்ளை (1709 – 1761) அவர்கள் 1735ஆம் ஆண்டு முதல் 1761ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்தும் இடையிடை விட்டும் நாட்குறிப்பு எழுதியுள்ளார். புதுச்சேரி,…

2 Comments

தமிழில் கையொப்பம் 2 : ’நீங்கள் தமிழர் இல்லையா?’

அரசு கல்லூரி முதல்வராக நான்காண்டுகள் பணியாற்றினேன். தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்பதை அதிகார நிலையில் எடுத்துச் சொல்வதற்கு வாய்த்தது. ஆசிரியர்கள், அலுவலர்கள் அளிக்கும் கடிதங்கள், விடுப்பு விண்ணப்பங்களில் தமிழ்க் கையொப்பம் இருக்கிறதா எனக் கவனிப்பேன். இல்லை என்றால் திருப்பி அனுப்பிவிடுவேன்.…

2 Comments