தூது இலக்கியம் 2

சிறுவெள்ளாங் குருகே! தூது என்பதற்கான வரையறை மிகவும் எளிதானதுதான். அதை நடைமுறை வாழ்க்கையிலிருந்து சொல்ல முடியும். நமக்கு  வேண்டியவருக்கு நேரில் போய்ச் செய்தியைச் சொல்ல முடியாது. நேரில் செல்ல முடியாத சூழலில் தன் சார்பாக இன்னொருவரை அனுப்பி  ‘இந்தச் செய்தியை சொல்லிவிட்டு…

2 Comments

தூது இலக்கியம் 1

சிட்டுக்குருவி! சிட்டுக்குருவி! தூது இலக்கியம் என்பது ஏதோ பழந்தமிழ் இலக்கியம் என்று நாம் கருதிவிடக் கூடாது. அது பழமையான நீண்ட நெடிய வரலாறு உடையதாக இருந்தாலும் கூட இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்து வரும் இலக்கிய வகைமை. சில இலக்கிய வகைமைகள் அவை…

0 Comments

அடுக்கத்து ஆடுமயில்

‘தண்டலை மயில்கள் ஆட’ என்னும் கம்பராமாயணப் பாடலைப் பற்றி எழுதிய கட்டுரையை வாசித்துவிட்டு என் மாணவர் அ.ஜெயக்குமார் (தமிழ் உதவிப் பேராசிரியர், மகேந்திரா கலை அறிவியல் கல்லூரி, காளிப்பட்டி) அதைப் போன்ற வருணனை வரும் இரண்டு இடங்களைக் கவனப்படுத்தினார். அவருக்கு நன்றி…

1 Comment

வீற்றிருக்கும் மருதம்!

கம்பராமாயணத்தில் இருந்து அதிகம் மேற்கோள் காட்டிய பாடல் பட்டியல் ஒன்றை எடுத்தால் பாலகாண்டம் நாட்டுப் படலத்தில் மருத நில வருணனையாக வரும் 'தாமரை விளக்கம் தாங்க' என்னும் பாடல் முதல் பத்துக்குள் வரும் என்று நினைக்கிறேன். யாப்பிலக்கணத்தில் அறுசீர் ஆசிரிய விருத்தத்திற்குச்…

4 Comments

பாலும் அழுக்கும்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் சங்க இலக்கியத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு. விடுதலைக்கு முன்  ‘எங்களுக்கும் பழமை இருக்கிறது. இலக்கியம், பண்பாடு எல்லாவற்றிலும் தொன்மை மிக்கவர்கள் நாங்கள்’ என்று ஆங்கிலேயர்களுக்கு உணர்த்தச் சங்க இலக்கியத்தை அறிஞர்கள் ஆதாரமாக்கினர்.  ‘ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு…

1 Comment

தாமஸ் வந்தார்!

தாமஸ் ஹிட்டோஷி ப்ரூக்ஸ்மா (செல்லமாக ‘டாம்’) அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் வசிப்பவர். தாய்வழிப் பூர்விகம் ஜப்பான். தந்தை வழி நெதர்லாந்து. டாம் அமெரிக்கக் குடிமகன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மாணவப் பருவத்தில் தமிழ் கற்கக் கிடைத்த நிதிநல்கை ஒன்றின் வழியாகத் தமிழ்நாட்டுக்கு…

3 Comments

கம்பராமாயணத்தில் உலக வழக்கு – 2

பாலகாண்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ‘தாடகை வதைப் படலம்.’ அதில் பயிலும் சொற்கள் தமிழ் மொழியின் எல்லாவகை அழகும் பொங்க அமைந்தவை.  தாடகையைக் கொல்ல இராமன் தயங்குகிறான். அப்போது அவள் எவ்வளவு கொடியவள் என விசுவாமித்திரர் இராமனுக்கு எடுத்துச் சொல்கிறார்.  அதில்…

4 Comments