அனைவரும் வருக!

  திட்டமிட்ட வகையில் என் எழுத்துப்பணியை இவ்வாண்டு (2025) அமைத்துக்கொள்ள முடியவில்லை. தொடர்பயணங்கள், இலக்கிய நிகழ்ச்சிப் பங்கேற்பு, குடும்பப் பொறுப்புகள் என நேரத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டியாயிற்று. வாசிப்புக்கும் நினைத்த அளவு நேரம் கிடைக்கவில்லை. தேவையை ஒட்டிய வாசிப்பு என்றானது.  ‘நீர்வழிப்…

0 Comments

முதல் மொழிப்போரில் பெண்கள்

  தமிழர்களுக்கு நீண்ட வரலாறு இருப்பினும் அதை எழுதி வைப்பதிலும் அதற்கான ஆவணங்களைப் பாதுகாத்து வைப்பதிலும் ஆர்வம் மிகக் குறைவு. நவீன காலத்திலும் அதில் பெருமாற்றம் நிகழவில்லை. நிர்ப்பந்தம் ஏற்படும் போதுதான் அதைப் பற்றிச் சிந்திக்கவும் பதிவு செய்து வைக்கவும் தலைப்படுகிறோம்.…

0 Comments

சகாயம் செய்த சகாயம் – முன்னுரை

  பொதுவெளியும் பொதுத்தன்மையும் ‘சகாயம் செய்த சகாயம்’ என்னும் இந்நூலை நான் எழுத நேர்ந்த சந்தர்ப்பம் பற்றி இதன் முதற்பதிப்பு (ஆகஸ்ட் 2014) முன்னுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன்.  ‘மாதொருபாகன்’ பிரச்சினை  துரத்திய 2015இல் என் நூல்கள் அனைத்தையும் அச்சிடுவதை நிறுத்தும்படி பதிப்பகங்களைக்…

0 Comments
Read more about the article பெரியார் வெளியிட்ட ‘அகத்தியர் ஆராய்ச்சி’
jan30

பெரியார் வெளியிட்ட ‘அகத்தியர் ஆராய்ச்சி’

  தந்தை பெரியார் தம்  ‘குடிஅரசு பதிப்பகம்’ மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார். தாம் எழுதியவை, தம் இயக்கத்தைச் சார்ந்தோர் எழுதியவை ஆகியவற்றோடு பிறர் எழுதிய நூல்களையும் தேவை கருதி வெளியிட்டுள்ளார். அந்நூல்களுள் ஒன்று  ‘அகத்தியர் ஆராய்ச்சி.’ சென்னை இராஜதானி கலாசாலை…

0 Comments

காவிரிப் பெருநிலம்

  நவீன இலக்கியப் பரப்பு மிக விரிந்ததும் பல வகைமைகளைக் கொண்டதும் ஆகும். ஆனால் மிகச் சில எழுத்தாளர்களைச் சுற்றிய வட்டத்திற்குள் அதைச் சுருக்கும் முயற்சிகள் திட்டமிட்டோ இடாமலோ நடக்கின்றன. அதற்குள் சிக்கிக் கொள்ளும் வாசகர்களும் கடிவாளப் பார்வையுடன் திரிய நேர்கிறது.…

0 Comments

பரிபாடல், மதன விலாசம், அகநக

  1 தமிழ்ச் செவ்வியல் நூல்களை உரையுடன் வெளியிடும் திட்டத்தை 2020 – 2021ஆம் நிதியாண்டில் அரசு வெளியிட்டது. அதன்படி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வழியாக நூல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே பத்துப்பாட்டு நூல்களும் எட்டுத்தொகையில்…

0 Comments

மலாயாவில் பெரியார்

  கோலாலம்பூரில் 21-12-25 ஞாயிறு அன்று  நடைபெற்ற ‘வல்லினம் விருது வழங்கும் விழா’வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இம்மாதம் மலேசியா சென்றிருந்தேன். விழாவில் பங்கேற்றோர் மூலமாக நான் வந்திருக்கும் செய்தியை அறிந்த தோழர் கோவிந்தசாமி முனுசாமி அவர்கள் அன்று இரவு பதினொரு…

0 Comments