கம்ப ராமாயணத்தில் உலக வழக்கு – 1

தமிழ்க் காப்பிய இலக்கியத் தொடக்கம் சிலப்பதிகாரம். தொடர்ந்தவை மணிமேகலை, பெருங்கதை. மூன்றும் ஆசிரியப்பாவால் ஆனவை. ஆசிரியப்பா உரைநடைத் தன்மை கொண்டது. உணர்ச்சி விவரணைகளுக்கு இடமில்லாமல் கதையைச் சொல்வதற்கு ஆசிரியப்பா ஏற்றது. அதன் போதாமையை உணர்ந்த இடங்களில் விருத்தப்பாக்களை இளங்கோவடிகள் கையாண்டிருக்கிறார். விருத்தப்பாவை…

1 Comment

இத்தாலிப் பயணம் 3 : சுடுஒயின் ஒத்தடம்

இத்தாலியின் பழமையான நகரங்களில் ஒன்று பிளோரன்ஸ். ஆர்னோ ஆற்றங்கரையின் இருபுறமும் நகரம். ஆற்றங்கரைக்குப் போக வேண்டுமானால் பெருந்தடுப்புச் சுவர்களில் எங்காவது விடப்பட்டிருக்கும் வழியில் இறங்கிச் செல்ல வேண்டும். ஆற்றில் படகுகள் செல்கின்றன. டிசம்பர் மாதத்தில் ஆறு நிதானமாக உள்ளடங்கிக் கீழாக ஓடிக்…

2 Comments

காதல் – சாதி – ஆணவப் படுகொலை

புதிய தலைமுறை இணைய இதழில் ‘ஊனே... உயிரே...’ என்னும் தலைப்பில் சிறு நேர்காணல்கள் வெளியாகி வருகின்றன. இதழாளர் அங்கேஸ்வர் என்னிடம் எடுத்த நேர்காணல் இது. ஒலிப்பதிவு செய்து எழுதிய வடிவம் இதழில் வெளியாகியுள்ளது. அதை ஓரளவு செம்மையாக்கி இங்கே வெளியிடுகிறேன். இதழ்ப்…

1 Comment

முத்தொள்ளாயிரம்: கரையுறிஞ்சி மீன்பிறழும்

எழுதிய கவிஞர் பெயர் தெரியாத பழந்தமிழ் இலக்கிய நூல்கள் பலவுண்டு. கவித்துவத்தின் சிகரம் என்று சொல்லக்கூடிய நூலுக்குக்கூட எழுதியவர் பெயர் தெரியாத அவலம் அனேகமாகத் தமிழில்தான் நடக்கும். அப்படி ஒரு நூல் முத்தொள்ளாயிரம். தொள்ளாயிரம் பாடல்கள் என்றும் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள்…

3 Comments

இத்தாலிப் பயணம் 2 : மொழிபெயர்ப்பு வளர்ச்சி

பிளோரன்ஸ் நகர இந்தியத் திரைப்பட விழாவில் ‘Book with kitchen’ என்னும் ‘BRAC’ புத்தக உணவகம் அளித்த நிதியுதவியில் என் அமர்வு நடந்தது. மாலை ஆறரை மணி நிகழ்ச்சிக்கு ஆறு மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். இந்தத் திரைப்பட விழாவுக்கு இருபத்து நான்கு ஆண்டுகளாக …

1 Comment

நாத்தினவு தீராத மகாவித்துவான்

தமிழ்ப் புலமை மரபின் கடைசிக்கண்ணியாக விளங்கியவர் திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். உ.வே.சாமிநாதையர் எழுதிய  வாழ்க்கை வரலாற்று நூல் மூலம் நிலைபெற்றிருக்கும் இவர் தல புராணங்கள் பலவற்றை இயற்றியுள்ளார். பிள்ளைத்தமிழ், கலம்பகம், உலா உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் பலவும் இவர் இயற்றியவை. கிட்டத்தட்ட…

2 Comments

நிறையக் கேள்விகள்!

இலயோலா கல்லூரியில் பங்கேற்ற நிகழ்ச்சி பற்றி நான் எழுதிய கட்டுரையில் (கற்றுக் கொடுக்கும் கலந்துரையாடல்) இப்படி ஒருதொடர் வருகிறது:  ‘மாணவர்கள் நிறையக் கேள்விகளுடன் இருக்கிறார்கள்.’ ‘நிறையக் கேள்வி’ என்பதில் ஒற்று மிகுமா என நண்பர் க.காசிமாரியப்பன் கேட்டிருந்தார். ‘மிகும்’ என்று சொல்லிவிட்டேன்.…

5 Comments