கரம்பா? கரும்பா?
கம்பராமாயணப் பாலகாண்டம் நாட்டுப்படலத்தில் மருத நில வளத்தை வருணிக்கும் இப்பாடலின் சிறப்பு பற்றி ஏற்கனவே கட்டுரை எழுதியிருந்தேன். இதில் பேச வேண்டிய செய்திகள் இன்னும் உள்ளன. வரம்பெலாம் முத்தம்; தத்தும் மடையெலாம் பணிலம்; மாநீர்க் குரம்பெலாம் செம்பொன்; மேதிக் குழியெலாம் கழுநீர்க்…
