பூரண விழா

  ‘இலக்கிய நகரம்’ என்று போற்றப்படும் (யுனஸ்கோ அத்தகுதியை வழங்கியிருக்கிறது) கோழிக்கோட்டில் 04-10-24 வெள்ளி அன்று ‘பூர்ணா பண்பாட்டுத் திருவிழா’ நிகழ்வு.  ‘பூர்ணா பதிப்பகம்’ கேரளத்தில் முக்கியமான பதிப்பகங்களில் ஒன்று. சிறுவயதில் செய்தித்தாள் விநியோகித்துப் பின் மிதிவண்டியில் புத்தகங்களை எடுத்துச் சென்று…

0 Comments

கொச்சியில் முழுமையான நாள்

மலையாளக் கவிஞர் சியாம் சுதாகர் அழைப்பின் பேரில் கொச்சியில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரி (Sacred Heart College) நிகழ்வில் கடந்த 03-10-24 வியாழன் அன்று பங்கேற்றேன். சென்னை, மாநிலக் கல்லூரியிலும் சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையிலும் பயின்றவர் சியாம் சுதாகர். …

0 Comments

சுகுமாரனின் ‘உஸ்தாத்’

நவீன இலக்கியத்தின் ஒருவகைமை சார்ந்து அடையாளம் பெற்றவர் இன்னொரு வகைமையில் தீவிரமாக இயங்கினாலும் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத சூழலே நிலவுகிறது. 1980களில் கவிஞராக அறிமுகமானவர் சுகுமாரன். ‘கோடைகாலக் குறிப்புகள்’ முதல் தொகுப்பு மிகுந்த கவனம் பெற்றது. அப்போது அவர் மேல் விழுந்த கவிநிழல் …

0 Comments

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பட்டமேற்பு விழா உரை, 23-01-2024

    கற்றுக்கொள்ளுங்கள்   அனைவருக்கும் வணக்கம். திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் ‘பட்டமேற்பு விழா’வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டச் சான்றிதழ்களை வழங்கி உரையாற்றக் கிடைத்த வாய்ப்பை  மகிழ்ச்சி மிக்க தருணமாகக் கருதுகிறேன். இவ்விழா அழைப்பிதழைப் பார்த்தவுடன் இரண்டு…

Comments Off on திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பட்டமேற்பு விழா உரை, 23-01-2024

27 நவம்பர் 2022 : அந்த நாள் பிற நாட்களைப் போல இல்லை

கடந்த நவம்பர் 27, 2022 அன்று மணப்பாறை, இளங்கோ மன்றம்  ‘பெருமாள்முருகன் படைப்புலகக் கொண்டாட்டம்’ என்னும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை நடத்தியது. 2021ஆம் ஆண்டு  ‘சௌமா இலக்கிய விருது’ வழங்கும் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக  மணப்பாறைக்குச் சென்றேன். ஓர் இலக்கிய நிகழ்வுக்கென…

Comments Off on 27 நவம்பர் 2022 : அந்த நாள் பிற நாட்களைப் போல இல்லை

விதைக்‘கலாம்’

      புதுக்கோட்டை ‘வீதி’ நூறாம் நிகழ்வு 01-10-22 அன்று நடைபெற்றபோது சமூக உணர்வோடு இயங்கும் பல்வேறு தரப்பினரையும் பாராட்டி விருதுக் கேடயம் வழங்கினர். அதில் ‘விதைக்கலாம்’ என்னும் அமைப்பைச் சேர்ந்த சிலரும் இருந்தனர். மரக்கன்றுகள் நடும் பணியைச் செய்யும்…

Comments Off on விதைக்‘கலாம்’

‘வீதி’ உலா

    புதுக்கோட்டை ‘வீதி’ அமைப்பின் நூறாவது நிகழ்வைக் கொண்டாடும் சிறப்பு நிகழ்வு 01 அக்டோபர் 2022 அன்று முழுநாள் நடைபெற்றது. உரைகள், பாராட்டுகள், விருதுகள் எனப் பலவற்றையும் உள்ளடக்கிய உண்மையான கொண்டாட்டம். மாலை நிகழ்வில் ‘பேருரை’ நிகழ்த்தச் சென்றேன். இந்நிகழ்வில்…

Comments Off on ‘வீதி’ உலா