நாமக்கல் கவிஞர் : இன்னும் இரண்டு புத்தகங்கள்

நாமக்கல் கவிஞர் 1888ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று பிறந்தார். இன்று 136ஆம் பிறந்த நாள். பொதுவாகக் கவிஞர் என்று அடையாளப்படுகிறார். ‘தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா’, ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ முதலிய தொடர்கள் அவர் உருவாக்கியவை. இன்று வரைக்கும் பயன்பாட்டில் உள்ளன. எனினும்  கவிதைகளை விட அவரது உரைநடை நூல்கள் முக்கியமானவை. மலைக்கள்ளன், காணாமல் போன கல்யாணப் பெண் என நாவல்கள் எழுதியிருக்கிறார். திருக்குறள் பற்றியும் கம்பராமாயணம் பற்றியும் ஆய்வு நோக்கிலும் நயம் பாராட்டும் வகையிலும் சில நல்ல நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளுக்கு உரை வரைந்துள்ளார். உரை எழுதும் காலத்தில் அவர் செய்த ஆய்வுகளே திருக்குறள் பற்றிய நூல்களாக உருவாயின.

1 Comment

சுகுமாரனின் ‘உஸ்தாத்’

நவீன இலக்கியத்தின் ஒருவகைமை சார்ந்து அடையாளம் பெற்றவர் இன்னொரு வகைமையில் தீவிரமாக இயங்கினாலும் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத சூழலே நிலவுகிறது. 1980களில் கவிஞராக அறிமுகமானவர் சுகுமாரன். ‘கோடைகாலக் குறிப்புகள்’ முதல் தொகுப்பு மிகுந்த கவனம் பெற்றது. அப்போது அவர் மேல் விழுந்த கவிநிழல் …

0 Comments

திருட்டு தவறுதானே, சகோதரி?

  கல்வித் துறை என்றால் பெரும்பாலும் மாணவர்களைப் பற்றியே பொதுத்தளத்தில் பேசுகிறோம். அவர்களை ஒழுக்கம் அற்றவர்களாகவும் எல்லாவகைத் தவறுகளையும் செய்பவர்களாகவும் சித்திரிக்கும் பொதுமனப் பிம்பம் ஒன்று அழிக்க இயலாதவாறு பரவியிருக்கிறது. காரணம் சமூகக் கருத்துருவாக்கத்தில் மாணவர் பங்கே இல்லை. கல்வி நிறுவனங்களில்…

0 Comments

 ‘பெரிய மாளிகை அது’

  சென்னையில் இந்த ஆண்டு மழைக்காலமும் பெருமழை வெள்ளத்தோடு தொடங்கியிருக்கிறது. தண்ணீர் தேங்குவது, வெள்ளம் வடியாமை ஆகியவற்றுக்கான காரணம் பற்றி நிபுணர்கள் பலவிதமாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதற்குச் சாலை மட்டம் உயர்ந்தும் வீடுகளின் மட்டம் தாழ்ந்தும் இருப்பது முக்கியமான…

Comments Off on  ‘பெரிய மாளிகை அது’

தொண்ணூறாம் வயது; ஆனி மாதம்

  1966ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று பிறந்தேன். அந்த ஆண்டு புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் தொடங்கியது. ஆகவே ஐந்து சனிக்கிழமையும் புரட்டாசியிலேயே வந்தன. ஒன்றாம் தேதி முதல் சனி. 29 ஐந்தாம் சனி. புரட்டாசியில் ஐந்து சனிக்கிழமை வருவது அபூர்வம்.…

Comments Off on தொண்ணூறாம் வயது; ஆனி மாதம்

பாரதியும் காந்தியும் : புதுப்புதுத் தரவுகள்

செப்டம்பர் 11 பாரதியார் நினைவுநாள். வாசிக்க எண்ணி வாங்கி வைத்திருக்கும் நூல்களுள் ஒன்றை இன்று வாசிக்கலாம் என்று அலமாரியில் துழாவினேன்.  ‘பாரதியும் காந்தியும்’ சட்டெனக் கைக்கு வந்தது. ஒரே மூச்சில் வாசித்துவிடத் தக்க நூல். தொகுப்பும் பதிப்பும் : ய.மணிகண்டன். இது…

Comments Off on பாரதியும் காந்தியும் : புதுப்புதுத் தரவுகள்

வீரப்பன் ஆனார் சின்னச்சாமி

    மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தம் மாணவராகிய உ.வே.சாமிநாதையரின் பெயரை மாற்றினார் என்பது பலருக்கும் தெரிந்த செய்தி. வேங்கடாசலபதி குலதெய்வம் ஆதலால் அப்பெயரையே தம் குடும்பத்தவர்க்கு வைக்கும் பரம்பரை வழக்கப்படி ‘வேங்கடராமன்’ என்னும் இயற்பெயரைச் சாமிநாதையர் பெற்றிருந்தார். சைவத்தைப் பின்பற்றி…

Comments Off on வீரப்பன் ஆனார் சின்னச்சாமி