அரசு ஊழியர் போராட்டம் : 3

அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் மிகவும் அவசியம். மக்கள் அனைவருக்குமே தம் ஓய்வுக் காலத்தை, முதுமையைப் பொருளாதாரச் சிக்கலின்றிக் கழிக்க ஓய்வூதியம் தேவை. பல நாடுகளில் அந்த நிலை இருக்கிறது. உதவித்தொகை என்றோ ஓய்வூதியம் என்றோ வழங்கி வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு…

1 Comment

அரசு ஊழியர் போராட்டம் : 2

போராட்டத்திற்கு எதிரான மனநிலை அரசு ஊழியர்களிடையே உருவானதில் 2003ஆம் ஆண்டுப் போராட்டத்திற்குப் பெரிய பங்கிருக்கிறது. அதற்குப் பின் வலுவான போராட்டம் ஏதுமில்லை. அறிவித்து நடந்தவையும் பிசுபிசுத்துப் போயின. ஏற்கனவே பெற்றிருந்த உரிமைகளைக் காப்பாற்றுவதுகூட இயலவில்லை. மிகச் சாதாரணமாக நடக்க வேண்டிய அன்றாட…

2 Comments

அரசு ஊழியர் போராட்டம் : 1

‘சோடா’ பற்றி நான் எழுதிய கட்டுரையில் ‘2003ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் இரண்டு லட்சம் பேரை ஒரே அரசாணையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பணிநீக்கம் செய்தார்’ என்று குறிப்பிட்டிருந்தேன். முதலில் 2003 என்பதற்குப் பதிலாக…

3 Comments

மீனெலாம் களிக்கும் மாதோ!

தேனை அடுக்கித் தொகுக்கும் கம்பராமாயண நாட்டுப்படலப் பாடலில் முதலில் ஆலைவாய்க் கரும்பின் தேன். கரும்பு நன்கு விளையும் வயல்கள். அருகில் கரும்புச்சாற்றைப் பிழிந்து வெல்லம் தயாரிக்கிறார்கள். கரும்புச்சாற்றை வேண்டுமளவு பருகலாம். அதன் சுவை தேனைப் போல அத்தனை இனிப்பாக இருக்கிறது. மித…

2 Comments

இல்லை துயில்!

கம்பராமாயணம், பாலகாண்டம், நாட்டுப்படத்தில் வரும் ‘நீரிடை உறங்கும் சங்கம்; நிழலிடை உறங்கும் மேதி’ என்னும் பாடல் பற்றிய விளக்கத்தில் தூக்கம், தூக்கமின்மை பற்றி எழுதியிருந்த பகுதியை வாசித்த என் மாணவர் ஒருவர் இன்னொரு பாடலை நினைவுக்குக் கொண்டு வந்தார். வகுப்பில் அடிக்கடி…

1 Comment

சோடா சோடா சோடா சோடா : 2

இப்போது எதற்கு இந்தச் சோடாப் புராணம்? சமீபத்தில் பழைய திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் வந்த காட்சிகளும் ஒருபாடலும் என்னுள் சோடா நினைவுகளைக் கிளறிவிட்டன. 1950, 60களில் வெளியான திரைப்படம் எதையாவது அவ்வப்போது பார்ப்பது என் வழக்கம். அப்படி எதேச்சையாகத் தேர்வு…

1 Comment

சோடா சோடா சோடா சோடா : 1

மேட்டுக்காடு என்று சொல்லும் வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து பிழைத்துக் கொண்டிருந்த வேளாண் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் தாத்தா பாட்டிக்கு மூன்று மகன்கள். தங்களுக்கு இருந்த பதினொரு ஏக்கர் நிலத்தை ஆளுக்கு மூன்று ஏக்கர் எனப் பிரித்துக் கொடுத்திருந்தார்கள்.…

2 Comments