தமிழில் கையொப்பம் 2 : ’நீங்கள் தமிழர் இல்லையா?’
அரசு கல்லூரி முதல்வராக நான்காண்டுகள் பணியாற்றினேன். தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்பதை அதிகார நிலையில் எடுத்துச் சொல்வதற்கு வாய்த்தது. ஆசிரியர்கள், அலுவலர்கள் அளிக்கும் கடிதங்கள், விடுப்பு விண்ணப்பங்களில் தமிழ்க் கையொப்பம் இருக்கிறதா எனக் கவனிப்பேன். இல்லை என்றால் திருப்பி அனுப்பிவிடுவேன்.…
