புதுமைப்பித்தன் போட்ட ‘ம்’
புதுமைப்பித்தன் நினைவு நாள் இன்று (ஜூன் 30). ஆ.இரா.வேங்கடாசலபதியின் பேருழைப்பில் ‘புதுமைப்பித்தன் களஞ்சியம்’ உருவாகியிருக்கிறது. புதுமைப்பித்தன் கதைகள், புதுமைப்பித்தன் கட்டுரைகள், புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள் ஆகிய முப்பெருந்தொகுதிகளை அடுத்து நான்காவதாக இக்களஞ்சியம் வெளியாகிறது. புதுமைப்பித்தனின் சமகாலத்தவர் எழுதிய மதிப்புரைகள், கட்டுரைகள், இரங்கல் உரைகள்…