‘பெரிய மாளிகை அது’

  சென்னையில் இந்த ஆண்டு மழைக்காலமும் பெருமழை வெள்ளத்தோடு தொடங்கியிருக்கிறது. தண்ணீர் தேங்குவது, வெள்ளம் வடியாமை ஆகியவற்றுக்கான காரணம் பற்றி நிபுணர்கள் பலவிதமாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதற்குச் சாலை மட்டம் உயர்ந்தும் வீடுகளின் மட்டம் தாழ்ந்தும் இருப்பது முக்கியமான…

Comments Off on  ‘பெரிய மாளிகை அது’

தொண்ணூறாம் வயது; ஆனி மாதம்

  1966ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று பிறந்தேன். அந்த ஆண்டு புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் தொடங்கியது. ஆகவே ஐந்து சனிக்கிழமையும் புரட்டாசியிலேயே வந்தன. ஒன்றாம் தேதி முதல் சனி. 29 ஐந்தாம் சனி. புரட்டாசியில் ஐந்து சனிக்கிழமை வருவது அபூர்வம்.…

Comments Off on தொண்ணூறாம் வயது; ஆனி மாதம்

பாரதியும் காந்தியும் : புதுப்புதுத் தரவுகள்

செப்டம்பர் 11 பாரதியார் நினைவுநாள். வாசிக்க எண்ணி வாங்கி வைத்திருக்கும் நூல்களுள் ஒன்றை இன்று வாசிக்கலாம் என்று அலமாரியில் துழாவினேன்.  ‘பாரதியும் காந்தியும்’ சட்டெனக் கைக்கு வந்தது. ஒரே மூச்சில் வாசித்துவிடத் தக்க நூல். தொகுப்பும் பதிப்பும் : ய.மணிகண்டன். இது…

Comments Off on பாரதியும் காந்தியும் : புதுப்புதுத் தரவுகள்

வீரப்பன் ஆனார் சின்னச்சாமி

    மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தம் மாணவராகிய உ.வே.சாமிநாதையரின் பெயரை மாற்றினார் என்பது பலருக்கும் தெரிந்த செய்தி. வேங்கடாசலபதி குலதெய்வம் ஆதலால் அப்பெயரையே தம் குடும்பத்தவர்க்கு வைக்கும் பரம்பரை வழக்கப்படி ‘வேங்கடராமன்’ என்னும் இயற்பெயரைச் சாமிநாதையர் பெற்றிருந்தார். சைவத்தைப் பின்பற்றி…

Comments Off on வீரப்பன் ஆனார் சின்னச்சாமி

தமிழ் அறிக: சொன்னது நீதானா?

    தலைப்பைப் பார்த்துத் தேர்தல் காலக் கேள்வி இது என்று யாரும் கருதிவிட வேண்டாம். அரசியல்வாதியைப் பார்த்து மக்கள் கேட்கும் கேள்வி போலவோ ஒரு அரசியல்வாதி இன்னொரு அரசியல்வாதியை நோக்கிக் கேட்கும் கேள்வி போலவோ தொனிப்பது தற்செயல். ‘நெஞ்சில் ஓர்…

Comments Off on தமிழ் அறிக: சொன்னது நீதானா?

தமிழைப் படித்தால் இரண்டுக்கும் லாபம் இல்லை

எழுத்தாளரும் தமிழ் இலக்கிய முனைவர் பட்ட ஆய்வாளருமான சதீஷ்குமார் (iskra) சமீபத்தில் உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ நூலிலிருந்து ஒரு மேற்கோளை முன்னிறுத்தி முகநூலில் ஒருபதிவு போட்டிருந்தார். உ.வே.சாமிநாதையருக்குப் பெண் பார்த்துத் திருமணம் முடிவு செய்கிறார்கள். பெண்ணின் தாத்தா ஐயாவையர், தந்தை கணபதி…

Comments Off on தமிழைப் படித்தால் இரண்டுக்கும் லாபம் இல்லை

உன்னைத் துதிக்க அருள் தா

  ‘தமிழ்த் தியாகையர்’ என்று கர்னாடக இசையுலகில் போற்றப்படும் பாபநாசம் சிவன் எழுதிய முதல் கீர்த்தனை ‘உன்னைத் துதிக்க அருள் தா’ எனத் தொடங்குவதாகும்.  திருவாரூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் தியாகராஜர் (தியாகேசர்) மீது இதை எழுதினார். 1911ஆம் ஆண்டு அக்கோயில்…

Comments Off on உன்னைத் துதிக்க அருள் தா