கட்டை விரல்

You are currently viewing கட்டை விரல்

கட்டை விரல்

வெட்டப்பட்ட
கட்டை விரலை
ஒட்டிக்கொள்ளக்
கடவுள் அனுமதித்துவிட்டார்

கடவுளின் பேச்சுக்கு
மறுபேச்சேது
ஒட்டிக்கொள்கிறேன்

இனி
என் கட்டை விரல்
கட்டை விரல் அல்ல
ஒட்டுவிரல்.

– மணல்வீடு – 19-07-16