உதயசங்கரின் சிறார் நூல்கள்

எழுத்தாளர் உதயசங்கரின் முதல் சிறுகதைத் தொகுப்பு  ‘யாவர் வீட்டிலும்’ சிறிய நூலாக 1990களில் வெளியாயிற்று. மிகச் சிறுகணத்தில் மனித மனோபாவம் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை முன்வைத்து எளிமையாக எழுதிய கதைகள். அத்தொகுப்பை வாசித்ததும் பிடித்தது. அதன் பின் மறதியின் புதைசேறு, நீலக்கனவு…

0 Comments

புத்தகக் காட்சியில் ஒருநாள்

உயர்கல்விக்காக 1988ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை சென்றேன். எட்டாண்டுகள் சென்னையில் வசித்தேன். 1989 முதல் ஒவ்வோர் ஆண்டும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று கொண்டேயிருக்கிறேன். அப்போதெல்லாம் எழுத்தாளர்கள் தான் காலார நடந்து கொண்டிருப்பார்கள். எந்தக் கடையில் யார் இருக்கிறார்கள் என்பது தூரத்திலிருந்தே…

1 Comment

‘காதலிப்பது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம்’

சென்னை, அண்ணாப் பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமை குறித்த அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. அரசை நம்பக் கூடாது; நீதிமன்றத்தை நம்பலாம் போல. இதற்கு ஆளுங்கட்சிதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் நிரூபிக்க முயல்கின்றன. ஆளுங்கட்சியோ தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுப் பல சொதப்பல்களைச் செய்கிறது.…

2 Comments

பத்துப்பாட்டு உரைகள்

  சங்க இலக்கிய நூல்களை வாசிக்க நல்ல உரைநூல்களைச் சொல்லுங்கள் என்று நண்பர்கள் யாராவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள். தேடி வாசிக்கிறார்களோ இல்லையோ கேட்பார்கள். அவரவர் ஆர்வம், கல்வி, வாசிப்புத் திறன் ஆகியவற்றை உத்தேசித்துச் சில உரைகளைப் பரிந்துரைப்பேன். அவற்றில் சில புத்தகச்…

3 Comments

போண்டு – முன்னுரை

  2024இல் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல் ‘போண்டு.’ காலச்சுவடு வெளியீடு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். ரோஹிணி மணியின் கைவண்ண அட்டை. அந்நூலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை இது. பாதாளக் குகை கடந்த ஆண்டு (2023) ‘வேல்!’ சிறுகதைத்…

1 Comment

வெள்ளச் சிலேடை

  கம்பராமாயணம் பாலகாண்டத்தின் முதலில் அமைந்திருப்பது ‘ஆற்றுப் படலம்.’ காப்பியத்திற்கே இதுதான் முதல் படலம். காப்பிய இலக்கணம் கூறும் தண்டியலங்காரம் ‘மலைகடல் நாடுவளநகர் பருவம் இருசுடர்த் தோற்றம் என்று இனையன புனைந்து’ என்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் காப்பியம் வருணிக்க வேண்டுமாம். மலை,…

0 Comments

ஐந்து கவிதைகள்

  1 எங்கிருந்தோ சொல்லைப் பஞ்சு போல் எடுக்கிறேன் கன்னத்தில் ஒற்றி மிருதுவைப் பரிசோதிக்கிறேன் பூச்சாற்றில் நனைத்துத் தேன் மணம் ஏற்றித் தென்றல் வரும்போது மெல்லப் பறக்க விடுகிறேன் எங்கிருந்தோ ஐயோவென்று ஓலம் எழுகிறது. --- 2 ஓராயிரம் தேனீக்கள்  எழுந்தாடத்…

3 Comments