சூறை! சூறைதான் அது! – 6

பின்னர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் மாத ஊதியத்திற்குப் பணியில் சேர்ந்தார். சில ஆண்டுகள் அங்கே தொடர்ந்து பணியாற்றினார்.  அங்கிருந்த போது பல நூல்களை மொழிபெயர்த்தார். அத்துடன் அந்நிறுவனம் சார்பாக வெளிவரும் ‘உங்கள் நூலகம்’ இதழ்ப் பணியையும் பார்த்துக் கொண்டிருந்தார். …

4 Comments

உ.வே.சா. கொடுத்த உறுதிமொழி

பழந்தமிழ் இலக்கியத்தில் ஒருவிஷயத்தை எடுத்து விவாதிக்கும் தர்க்க முறைகள் பேசப்பட்டுள்ளன. மணிமேகலை, நீலகேசி உள்ளிட்ட சமய நூல்களில் இவற்றைக் காணலாம். எதிர்க்கருத்தை, எதிராளியைக் கேலி செய்வதும் எள்ளி நகையாடுவதும் உண்டு. தம் கருத்தை எடுத்து வைக்கும்போது பொருள் சார்ந்து தீவிரமாகப் பேசுதலைக்…

4 Comments

சூறை! சூறைதான் அது! – 5

சிறு சமரசங்களுக்கும் உட்படாத இயல்பு காரணமாக யூமா இழந்த வாய்ப்புகள் பல. சிலவற்றில் அறிந்தோ அறியாமலோ நானும் சம்பந்தப்பட்டிருக்கிறேன். இரண்டாவது சம்பவம் இது.  ‘தினமணி’ நாளிதழில் கொஞ்ச காலம் அவர் பணியாற்றினார். அது நல்ல வாய்ப்பு. தமிழ் நாளிதழ்களில் நல்ல ஊதியம்…

1 Comment

சூறை! சூறைதான் அது! – 4

குதிரை வீரன் பயணம் முதல் இதழைத் தொடர்ந்த இதழ்களில் பழையவர்கள், புதியவர்கள் எனப் பலரும் எழுதினர். குதிரைவீரனின் ஏழு இதழ்களும் யூமாவின் இலக்கியப் பங்களிப்பில் குறிப்பிடத்தக்கவை. ஆப்செட் அச்சு அப்போது அறிமுகமாகிவிட்ட போதும் அது மிகுதியாகச் செலவு பிடிப்பதாக இருந்ததால் கையால்…

1 Comment

சூறை! சூறைதான் அது! – 3

யூமாவாசுகியின் பிடிவாதம் அவர் விஷயத்தில் மட்டுமல்ல, அவருக்கு வேண்டியவர்கள் விஷயத்திலும் தீவிரமாக இருக்கும். என் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘திருச்செங்கோடு’ பழவந்தாங்கல் காலத்தில் 1994இல் வெளியாயிற்று. இரண்டாம் தொகுப்பு ‘நீர் விளையாட்டு’ 2000ஆம் ஆண்டில் வந்தது. இவ்விரண்டு தொகுப்புகளிலும் மூன்று நான்கு …

1 Comment

சூறை! சூறைதான் அது! – 2

யூமா இயல்பாக எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். குறைவாகவே அவர் பேசுவார். நானும் அவ்வளவாகப் பேசாதவன் என்ற போதும் அவருக்கும் சேர்த்து நானே பேச வேண்டியிருக்கும். முதல் மாடியில் இருந்த எங்கள் வீட்டுக்கு முன் பெரிய முற்றம். மாமரங்களின் கிளைகளை…

3 Comments

சூறை! சூறைதான் அது! – முதற்பகுதி

யூமா.வாசுகியின் படைப்புகளைப் பற்றிய இந்நிகழ்வில் அவருடனான என் அனுபவங்களை முதன்மையாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  அவர் படைப்புகள் குறித்தும் என்னுடைய கருத்துக்களைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்ள எண்ணம்.   சென்னை,  கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில்  வழித்தடத்தில் கிண்டி, பரங்கிமலை…

6 Comments