இத்தாலிப் பயணம் 3 : சுடுஒயின் ஒத்தடம்
இத்தாலியின் பழமையான நகரங்களில் ஒன்று பிளோரன்ஸ். ஆர்னோ ஆற்றங்கரையின் இருபுறமும் நகரம். ஆற்றங்கரைக்குப் போக வேண்டுமானால் பெருந்தடுப்புச் சுவர்களில் எங்காவது விடப்பட்டிருக்கும் வழியில் இறங்கிச் செல்ல வேண்டும். ஆற்றில் படகுகள் செல்கின்றன. டிசம்பர் மாதத்தில் ஆறு நிதானமாக உள்ளடங்கிக் கீழாக ஓடிக்…