சூறை! சூறைதான் அது! – 4

குதிரை வீரன் பயணம் முதல் இதழைத் தொடர்ந்த இதழ்களில் பழையவர்கள், புதியவர்கள் எனப் பலரும் எழுதினர். குதிரைவீரனின் ஏழு இதழ்களும் யூமாவின் இலக்கியப் பங்களிப்பில் குறிப்பிடத்தக்கவை. ஆப்செட் அச்சு அப்போது அறிமுகமாகிவிட்ட போதும் அது மிகுதியாகச் செலவு பிடிப்பதாக இருந்ததால் கையால்…

1 Comment

சூறை! சூறைதான் அது! – 3

யூமாவாசுகியின் பிடிவாதம் அவர் விஷயத்தில் மட்டுமல்ல, அவருக்கு வேண்டியவர்கள் விஷயத்திலும் தீவிரமாக இருக்கும். என் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘திருச்செங்கோடு’ பழவந்தாங்கல் காலத்தில் 1994இல் வெளியாயிற்று. இரண்டாம் தொகுப்பு ‘நீர் விளையாட்டு’ 2000ஆம் ஆண்டில் வந்தது. இவ்விரண்டு தொகுப்புகளிலும் மூன்று நான்கு …

1 Comment

சூறை! சூறைதான் அது! – 2

யூமா இயல்பாக எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். குறைவாகவே அவர் பேசுவார். நானும் அவ்வளவாகப் பேசாதவன் என்ற போதும் அவருக்கும் சேர்த்து நானே பேச வேண்டியிருக்கும். முதல் மாடியில் இருந்த எங்கள் வீட்டுக்கு முன் பெரிய முற்றம். மாமரங்களின் கிளைகளை…

3 Comments

சூறை! சூறைதான் அது! – முதற்பகுதி

யூமா.வாசுகியின் படைப்புகளைப் பற்றிய இந்நிகழ்வில் அவருடனான என் அனுபவங்களை முதன்மையாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  அவர் படைப்புகள் குறித்தும் என்னுடைய கருத்துக்களைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்ள எண்ணம்.   சென்னை,  கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில்  வழித்தடத்தில் கிண்டி, பரங்கிமலை…

6 Comments

சனாதனப் பேச்சு

பேருந்து, ரயில் பயணங்களில் மிகுந்த தொந்தரவாக இருப்பது செல்பேசிச் சத்தம். பொதுவெளி அனைவருக்கும் உரியது. அதில் பிறருக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்னும் உணர்வு நம்மிடம் இல்லை. அழைப்பொலியைச் சத்தமாக வைத்துக் கொள்வார்கள். 'மாமோய்... எங்கிருக்கறீங்க? ' என்னும் கூவல் இப்போது…

7 Comments

தாமஸ் வந்தார்!

தாமஸ் ஹிட்டோஷி ப்ரூக்ஸ்மா (செல்லமாக ‘டாம்’) அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் வசிப்பவர். தாய்வழிப் பூர்விகம் ஜப்பான். தந்தை வழி நெதர்லாந்து. டாம் அமெரிக்கக் குடிமகன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மாணவப் பருவத்தில் தமிழ் கற்கக் கிடைத்த நிதிநல்கை ஒன்றின் வழியாகத் தமிழ்நாட்டுக்கு…

3 Comments

இட ஒதுக்கீட்டு விழிப்புணர்வு

அரசுப் பள்ளியில் படிக்கும் எங்கள் ஊர் மாணவர்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பயில்பவர்கள். அரசுப் பள்ளியில் இருக்கும் ஆங்கில வழிப் படிப்பில் பயில்வதாகப் பலர் சொன்னார்கள். 2013-2014ஆம் கல்வியாண்டில்  அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிப்…

5 Comments