சித்திரக் கதை வடிவில் வாடிவாசல்

1988ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்தபோது சிற்றிதழ்கள் மேல் பெருமோகம் இருந்ததால் ‘எழுத்து’ இதழை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம் என எண்ணிச் சி.சு.செல்லப்பாவைச் சந்தித்தேன். அந்த அனுபவத்தைப் பிறகு ‘கடைவாய்ப் பல்லும் நல்ல கதைகளும்’ எனக் கட்டுரையாக எழுதினேன்.…

1 Comment
Read more about the article உ.வே.சா. தீட்டிய  பெருஞ்சித்திரம்
Version 1.0.0

உ.வே.சா. தீட்டிய  பெருஞ்சித்திரம்

உ.வே.சாமிநாதையர் எழுதியவை ஒவ்வொன்றும் வாசிக்குந்தோறும் வியப்பைத் தருபவை. ஏதேனும் ஒருவகையில் முன்னோடி முயற்சியாக விளங்குபவை. குருகுலக் கல்வி முறையில் கற்று நவீனக் கல்வி நிறுவனத்தில் உ.வே.சா. பணியாற்றினார். அவரது ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாழ்க்கை முழுமையும் மரபானது. குருகுலக் கல்வி…

0 Comments

மயிலன் கதைகளின் நவீனத் தன்மை

மயிலன் ஜி சின்னப்பன் 2017 முதல் எழுதத் தொடங்கியவர். ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ (2020) நாவலும் ‘நூறு ரூபிள்கள்’ (2021),  ‘அநாமயதேயக் கதைகள்’ (2021), ‘சிருங்காரம்’ (2022) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. திருச்சியில் மருத்துவராகப் பணியாற்றும் இவர் மிகக் குறைந்த காலத்தில்,…

0 Comments

கள் மணக்கும் பக்கங்கள்

  2024ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது ஆய்வு நூல் ஒன்றுக்குக் கிடைத்திருக்கிறது. புனைவல்லாத நூலுக்கு எப்படி வழங்கலாம் என்று சில முணுமுணுப்புகள் எழுந்தன. அது இலக்கிய விமர்சன நூல் அல்ல, வரலாற்று ஆய்வு நூல் என்று சிலர் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.…

2 Comments

உதயசங்கரின் சிறார் நூல்கள்

எழுத்தாளர் உதயசங்கரின் முதல் சிறுகதைத் தொகுப்பு  ‘யாவர் வீட்டிலும்’ சிறிய நூலாக 1990களில் வெளியாயிற்று. மிகச் சிறுகணத்தில் மனித மனோபாவம் எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை முன்வைத்து எளிமையாக எழுதிய கதைகள். அத்தொகுப்பை வாசித்ததும் பிடித்தது. அதன் பின் மறதியின் புதைசேறு, நீலக்கனவு…

0 Comments

பத்துப்பாட்டு உரைகள்

  சங்க இலக்கிய நூல்களை வாசிக்க நல்ல உரைநூல்களைச் சொல்லுங்கள் என்று நண்பர்கள் யாராவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள். தேடி வாசிக்கிறார்களோ இல்லையோ கேட்பார்கள். அவரவர் ஆர்வம், கல்வி, வாசிப்புத் திறன் ஆகியவற்றை உத்தேசித்துச் சில உரைகளைப் பரிந்துரைப்பேன். அவற்றில் சில புத்தகச்…

3 Comments

சொற்சேர்க்கை அகராதி : கனத்த மழை, பலத்த காற்று

  தமிழ் உலகச் செம்மொழிகளில் ஒன்று என நாம் தொடை தட்டிக் கொண்டிருந்தாலும் இதை எளிதாக அணுகுவதற்கும் கற்றுக் கொள்வதற்கும்  போதுமான கருவி நூல்கள் நம்மிடம் இல்லை. ஓரளவு அகராதிகள் இருக்கின்றன. பல அகராதிகள் புதுப்பிக்கப்படவில்லை. தற்காலத் தமிழில் எத்தனை சொற்கள்…

1 Comment