அரிசீம்பருப்பு

  திருப்பதில் லட்டுக்குப் பயன்படும் நெய் பற்றிய பிரச்சினை ஓய்ந்துவிட்டது.  தீபாவளிக்கு லட்டு சாப்பிட்டு மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் நாள் இது. இனிப்புக் கடைகளில் எல்லாம் எத்தகைய நெய்யால் லட்டு செய்கிறார்கள் என்பது பற்றி யாருக்கும் கேள்வியில்லை. ‘சுத்தமான நெய்யில் செய்தது’…

2 Comments

தமிழ்த்தாய் வாழ்த்து: மாற்றியவர் யார்?

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சையைப் பல்வேறு கோணங்களில் விவாதித்த நம் ஊடக சமூகம் இப்போது மறந்து கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு நெடுநாள் எழுத நினைத்திருந்த ‘மனோன்மணீயம்’ பதிப்பு பற்றிச் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள இதுவே பொருத்தமான சந்தர்ப்பம்.

3 Comments

தனியார் நிறுவனத்திலும் இந்தி

பொதிகைத் தொலைக்காட்சி (DD தமிழ் என்று ‘தமிழ்’ சேர்த்தது சாதனையாம். ‘பொதிகை’ தமிழ் இல்லையோ?) சார்பில் நடைபெற்ற இந்தி மாத நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார். அந்நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்னும் அடியை விட்டுவிட்டுப் பாடியது தொடர்பான சர்ச்சை பெரிதாகி உள்ளது. அவ்வடியைப் பாடியோர் மறந்துவிட்டுப் பாடியிருக்கலாம்; ஆளுநருக்குப் பிடிக்கும் என்று நினைத்து வேண்டுமென்றே விட்டுமிருக்கலாம். எப்படியோ இப்போது பலகோணப் பிரச்சினையாக மாறியிருக்கிறது.

1 Comment

வீரப்பன் ஆனார் சின்னச்சாமி

    மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தம் மாணவராகிய உ.வே.சாமிநாதையரின் பெயரை மாற்றினார் என்பது பலருக்கும் தெரிந்த செய்தி. வேங்கடாசலபதி குலதெய்வம் ஆதலால் அப்பெயரையே தம் குடும்பத்தவர்க்கு வைக்கும் பரம்பரை வழக்கப்படி ‘வேங்கடராமன்’ என்னும் இயற்பெயரைச் சாமிநாதையர் பெற்றிருந்தார். சைவத்தைப் பின்பற்றி…

Comments Off on வீரப்பன் ஆனார் சின்னச்சாமி

தமிழ் அறிக: சொன்னது நீதானா?

    தலைப்பைப் பார்த்துத் தேர்தல் காலக் கேள்வி இது என்று யாரும் கருதிவிட வேண்டாம். அரசியல்வாதியைப் பார்த்து மக்கள் கேட்கும் கேள்வி போலவோ ஒரு அரசியல்வாதி இன்னொரு அரசியல்வாதியை நோக்கிக் கேட்கும் கேள்வி போலவோ தொனிப்பது தற்செயல். ‘நெஞ்சில் ஓர்…

Comments Off on தமிழ் அறிக: சொன்னது நீதானா?

தமிழைப் படித்தால் இரண்டுக்கும் லாபம் இல்லை

எழுத்தாளரும் தமிழ் இலக்கிய முனைவர் பட்ட ஆய்வாளருமான சதீஷ்குமார் (iskra) சமீபத்தில் உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ நூலிலிருந்து ஒரு மேற்கோளை முன்னிறுத்தி முகநூலில் ஒருபதிவு போட்டிருந்தார். உ.வே.சாமிநாதையருக்குப் பெண் பார்த்துத் திருமணம் முடிவு செய்கிறார்கள். பெண்ணின் தாத்தா ஐயாவையர், தந்தை கணபதி…

Comments Off on தமிழைப் படித்தால் இரண்டுக்கும் லாபம் இல்லை

உன்னைத் துதிக்க அருள் தா

  ‘தமிழ்த் தியாகையர்’ என்று கர்னாடக இசையுலகில் போற்றப்படும் பாபநாசம் சிவன் எழுதிய முதல் கீர்த்தனை ‘உன்னைத் துதிக்க அருள் தா’ எனத் தொடங்குவதாகும்.  திருவாரூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான் தியாகராஜர் (தியாகேசர்) மீது இதை எழுதினார். 1911ஆம் ஆண்டு அக்கோயில்…

Comments Off on உன்னைத் துதிக்க அருள் தா